மெரினா போராட்ட மாணவர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம்

image

சென்னை.மார்ச்.05., தமிழகத்தில் பெரும் மாணவர் புரட்சியை உருவாக்கிய ஜல்லிக்கட்டு வெற்றி போராட்டத்திற்க்கு பின் போராட்டத்தை வழிநடத்திய மாணவர் அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டத்தின் முதல் அமர்வு நேற்று (04.03.2017) சென்னையில் நடைப்பெற்றது.

மாணவர் இந்தியா சார்பாக மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் மற்றும் மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர் பங்கேற்றனர்.

இதில் அனைத்து மாணவர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து “தமிழக மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு” (Confederation Of Tamilnadu Students Organization-COTSO) உருவாக்கப்பட்டது.கூட்டமைப்பின் அடுத்த அமர்வில் கொள்கைகள்,செயல்பாடுகள் குறித்து இறுதி முடிவு வகுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஊடகபிரிவு :
மாணவர் இந்தியா தலைமை