ரியாத்தில் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் ஆலோசனை கூட்டம்!

image

image

ரியாத் மண்டல இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் ஆலோசனை கூட்டம் மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் ரியாத் மண்டல ஆலோசகர் நாகை N.S.ஹமீது அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

இதில் பொருளாலர் நிவாஜிதீன்,
துணைச் செயலாளர்கள்
ஹாஜாமைதின், நைனார்,
சிக்கத்தர், சாதிக் பாஷா,
முகம்மது யூசுப்தின்,
IT WING நிர்வாகிகள்
காயல் காதர் சாகிப் (தங்க தம்பி), முகம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பது, ஒலாயா, தரயா பகுதிகளில் கிளைகள் துவங்குவது, இலவச குர்ஆன் வழங்குவது,
தர்பியா நிகழ்ச்சி நடத்துவது,
இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக உம்ரா செல்வதற்கு ஏற்பாடு செய்வது ஆகியவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

இன்று ரியாத் நசியா பகுதியில் கிளை துவங்கப்பட்டது. ரியாத்தில் பணிபுரியும் சகோதரர்கள் IKP-யில் சேர்ந்தனர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING)
ரியாத் மண்டலம்.