You are here

ஐடி ரைடு என்ற பெயரில் அச்சுறுத்தலா? மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கண்டனம்..!


தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், இக்கூட்டணியை அச்சுறுத்தும் நோக்கோடு திமுக தலைவர் அண்ணன் திரு.தளபதி ஸ்டாலின் அவர்களின் மகள் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சார்பில் சோதனை நடைபெற்றுவருவது உள்நோக்கம் கொண்டதாகும்.

சமீப காலமாக திமுகவினரை குறிவைத்து இத்தகைய அணுகுமுறைகள் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது.

இப்படி நெருக்கடிகள் கொடுத்தால் களத்தில் உளவியல் ரீதியாக சோர்ந்துவிடுவார்கள் என்பது தான் இதன் நோக்கமாகும்.

இதன் மூலம் மத்திய பாஜக அரசின் கிளை நிறுவனம் போல் மத்திய வருமான வரித்துறை செயல்படுகிறதோ? என்ற சந்தேகம் மீண்டும் வலுத்து இருக்கிறது.

இதையும் கடந்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரம்மாண்ட வெற்றியை பெறும் என்பதையும், இதுபோன்ற சோதனைகள் இக்கூட்டணியின் தொண்டர்களுக்கு மேலும் உத்வேகத்தையும் தரும் என்பதையும் சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கின்றோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
2.4.2021

Top