கொள்ளுமேட்டில் பானை சின்னத்திற்கு ஆதரவாக மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது அவர்கள் பரப்புரை!


ஏப்.02,
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொள்ளுமேடு ஊராட்சியில் மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன்ரசீது அவர்கள் தேர்தல் பரப்புரை செய்தார்.

அத்தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் சிந்தனை செல்வன் அவர்களுக்கு ‘பானை’ சின்னத்தில் வாக்கு கேட்டு கடைத்தெருவில் பேசினார்.

முன்னதாக அவரை அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இந்நிகழ்வுகளில், மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், மாவட்ட செயலாளர் O.R ஜாகீர் ஹுசைன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கியாசுதீன், கொள்ளுமேடு ரியாஸ், நிர்வாகிகள் ஹம்ஜா, முசரப் உள்பட அப்பகுதிகளை சேர்ந்த மஜக நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#காட்டுமன்னார்கோயில்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021