திருவாடானை காங்கிரஸ் வேட்பாளர் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன் சந்திப்பு..


ஏப்.02., மச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவாடானை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. #கருமாணிக்கம் அவர்கள் நேற்று இரவு #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து பரப்புரைக்கு அழைப்பு விடுத்தார்.

நேரமின்மையால் காணொளி ஒன்றின் மூலம் பரப்புரை செய்து மஜகவினர் அதை மக்களிடம் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்வதாக கூறினார்.

அதன்பிறகு திருவாடானை தொகுதி மஜகவினரை தொடர்பு கொண்டு இறுதி கட்ட பணிகளை தீவிரப்படுத்தமாறு பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டார். திருவாடானை தொகுதியில் மஜக துணை பொதுச்செயலாளர் மண்டலன் ஜெய்னுலாப்தீன் அவர்களின் தலைமையில் பரப்புரை பணிகள் ஒருங்கிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் மாநில துணை செயலாளர் நாகை முபாரக், ஐடி விங் மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ், மாவட்ட செயலாளர் இலியாஸ், துணை மாவட்ட செயலாளர் முஸம்மில், எமனை சாகுல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#இராமநாதபுரம்_மாவட்டம்
01.04.21