You are here

உருக்குலைந்த கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டும் பனி.

கத்தார்.செப்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல் நாட்டுப்பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பாக மண்டல செயலாளர் உத்தமபாளையம் உவைஸ் மற்றும் கத்தார் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் சென்னை கதீர் அஹ்மது இருவரும் முதல்கட்ட வெள்ள நிவாரண நிதியாக Rs 80ஆயிரம் ரூபாய் மாநில பொருளாளர் ஜனாப் SS.ஹாரூன் ரஷீத் அவர்களிடம் மாநில தலைமையகத்தில் வைத்து வழங்கினார் இச்சந்திப்பின்போது மாணவர் இந்தியா மாநில பொருளாளர் ஜாவித் ஜாபர் உடனிருந்தார்.

மேலும் மாநில பொருளாளர் பேசும்போது கேரள வெள்ள நிவாரணநிதி திரட்டுவது தொடர்பாகபங்காற்றிய அனைத்து மண்டல நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் நிதி அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுதலையும் தெரிவித்ததோடு

இதுபோன்ற மனிதநேய பணிகளில் மொழி இனம் ஜாதி மத பாகுபாடின்றி ஈடுபடுத்திக்கொள்ளுமாறு அனைத்து மண்டல நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING. #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #கத்தார்_மண்டலம்
2/09/2018

Top