வேலூர்.ஜூன்.15.,பித்ரா எனப்படுவது நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு தர்மம் செய்தலாகும், இதன் முக்கிய நோக்கமே நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் வகுத்துள்ள சிறப்பு ஏற்பாடு தான் இந்த சதகதுல் பித்ரா நோன்புப் பெருநாள் தர்மமாகும். இஸ்லாத்தில் ஏழைகளுக்கு உதவுவதையும், அவர்களின் கண்ணீர் துடைப்பதையும் முக்கிய கடமையாக்கப்பட்டுள்ளது, அதனடிப்படையில் தான் நபிகள் நாயகம் “பசித்தவருக்கு உணவளிப்பதுதான் இஸ்லாம்” என்றும், “அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்பவர் இறை நம்பிக்கையாளர் அல்லர்” என்று உரக்க கூறினார். ஈதுல் பித்ர் என்னும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு தர்மம் செய்யும் தூய எண்ணத்தோடு மனித நேய ஜனநாயக கட்சி குடியாத்தம் நகரம் சார்பாக பித்ரா வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் S.அனீஸ் தலைமை வகித்தார், மாவட்ட பொருளாளர் SMD.நவாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் I.S. முனவ்வர் ஷரீப், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் S.M.நிஜாமுத்தீன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.நகர நிர்வாகிகள் சலீம்,பிலால்,ஷாபீர் ,முபாரக், அல்தாப்,முன்னா, வகிக்த்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில
Month:
கத்தார் தமிழர் சங்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி..! MKP நிர்வாகிகள் பங்கேற்பு..!!
தோஹா.ஜூன்.14., கத்தார் தமிழர் சங்க நிர்வாகிகள் சார்பாக நேற்று (13.06.2018) ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் நிகழ்ச்சியில் மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டல, மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் முதலவதாக கத்தார் மண்டல துணைச் செயலாளர் மீசல் செய்யது கனி சமூக நல்லிணக்க இப்தார், தமிழர்களின் மனிதநேய பண்புகள் போன்ற தலைப்பில் வாழ்த்துரை வழங்கினார். அதைத் தொடர்ந்து கத்தார் மண்டல ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹூசைன் நோன்பின் சிறப்பை பற்றி வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக கத்தார் தமிழர் சங்க தலைவர் DR. துரைசாமி குப்பன் அவர்களுக்கு கத்தார் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் கஃதீர் அஹ்மத் அவர்களுக்கு சால்வை போற்றி மரியாதை செய்தனர். இந்திகழ்ச்சியை சகோதரர் விஜயன் பாபு ராஜ், ரமா செல்வம் மற்றும் ஏனைய தமிழர் சங்க நிர்வாகிகள் சிற்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தகவல்; #MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம் 14/06/2018
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்..!
( மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி) அன்பும், சகோதரத்துவமும், ஈகை குணமும் பூத்துக் குலுங்கும் இனிய மாதம்தான் ரமலான்.! இறைவனின் அருள் பெற வேண்டி, மாதம் முழுக்க ஏறத்தாழ 14 மணி நேரம் தொடர்ச்சியாக, தண்ணீர் கூட அருந்தாமல், நோன்பினை கடைப்பிடித்து, அதன் நிறைவாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது ஈதுள் ஃபித்ர் எனும் ரமலான் பண்டிகை.! மகிழ்ச்சியில் மிகப் பெரிய மகிழ்ச்சி என்னவெனில், இல்லாதவர்களுக்கு செல்வங்களை கொடுத்து மகிழ்வது தான். அதனால் தான் ரமலான் பண்டிகையை "ஈகைத் திருநாள்" என வர்ணிக்கிறார்கள். பசியின் கொடுமையை உணர்தல், செல்வங்களை பகிர்ந்து கொடுத்தல், சகோதரத்துவத்தை வளர்த்தல், அன்பினை பகிர்தல் என ஒரு பண்டிகை மனித நேயத்தை வலியுறுத்துகிறது என்றால் அது ரமலான் பண்டிகைதான் என்பது ஒரு சிறப்பாகும்.! இந்நன்னாளில், மனிதநேயம் ஓங்கவும், உரிமைப் போராட்டங்கள் வெல்லவும், அன்பும்-அமைதியும் செழிக்கவும், சமூக நீதி நிலைபெறவும் உறுதியேற்போம்.! அனைவருக்கும் மனம் நிறைந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 14.06.2018
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பில் வீடுதேடி ஃபித்ரா வினியோகம்..!
புதுகை.ஜூன்.14., இஸ்லாமிய கலாச்சார பேரவை(IKP) மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் அக்னிபஜார் பகுதியில் மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் துவங்கிவைத்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் அஜ்மீர் அலி, ஒளி முகம்மது, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன், மற்றும் நகர பொருளாளர் அப்துல் கரீம் முன்னிலை வாகித்தனர். மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் ஷாஜஹான் அனைவரையும் வாரவேற்றார். மாவட்ட செயலாளர் முபாரக் அலி மார்க்க விளக்க உரையாற்றினார். இறுதியில் நகர செயலாளர் ஜகுபர் சாதிக் நன்றி கூறினார். 200 ஏழைகளுக்குரிய பெருநாள் தர்மம் (ஃபித்ரா) வாகனத்தில் வைத்து வீடுதேடி வினியோகம் செய்யப்பட்டது. சமையல் பொருட்கள் ரொக்கம் உள்பட 35.000 மதிப்புள்ள பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை (IKP) #IKP_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
திருச்சி மஜக இஃப்தார் நிகழ்வில் சுற்றுலா துறை அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன் பங்கேற்பு..!
திருச்சி. ஜூன்.14., நேற்று திருச்சி மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா திலைமையில் நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, சுற்றுலா துறை அமைச்சர் திரு.வெள்ளமண்டி நடராஜன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.குமார், ஜமாத்துல் உலமா மாவட்ட துணை செயலாளர் சலாம் ஹஜ்ரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 500க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் நிகழ்வில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, துணைச் செயலாளர்கள் S.M ரபீக் சேக் தாவூத், பஷிர் அகமது, மாவட்ட அணி நிர்வாகிகள் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் புரோஸ் கான், இளைஞரணி துணை செயலாளர் கள் ஆரிப், சதாம் உசேன், மருத்துவ சேவை அணி துணைச் செயலர்கள் அபுபக்கர், காட்டூர் சித்திக், மற்றும் வியாபாரிகள் ஜமாத்தார்கள், மற்றும் அதிமுக வின் மாவட்ட நிர்வாகிகள் துணை செயலாளர் கள் பகுதி செயலாளர்கள் ஒன்றிய செயலாளர் கள் பேருர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் அனைத்து சமூக மக்களும் சமூக ஆர்வலர்களும் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் மருத்துவ சேவை அணி