அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்பவர் இறை நம்பிக்கையாளர் அல்லர். மஜக இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP குடியாத்தம் நகரம் சார்பாக ஏழை எளியோருக்கு பித்ரா வழங்கும் நிகழ்வு

வேலூர்.ஜூன்.15.,பித்ரா எனப்படுவது நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு தர்மம் செய்தலாகும், இதன் முக்கிய நோக்கமே நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் வகுத்துள்ள சிறப்பு ஏற்பாடு தான் இந்த சதகதுல் பித்ரா நோன்புப் பெருநாள் தர்மமாகும். இஸ்லாத்தில் ஏழைகளுக்கு உதவுவதையும், அவர்களின் கண்ணீர் துடைப்பதையும் முக்கிய கடமையாக்கப்பட்டுள்ளது, அதனடிப்படையில் தான் நபிகள் நாயகம் “பசித்தவருக்கு உணவளிப்பதுதான் இஸ்லாம்” என்றும், “அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்பவர் இறை நம்பிக்கையாளர் அல்லர்” என்று உரக்க கூறினார்.

ஈதுல் பித்ர் என்னும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு தர்மம் செய்யும் தூய எண்ணத்தோடு மனித நேய ஜனநாயக கட்சி குடியாத்தம் நகரம் சார்பாக பித்ரா வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் S.அனீஸ் தலைமை வகித்தார், மாவட்ட பொருளாளர் SMD.நவாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் I.S. முனவ்வர் ஷரீப், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் S.M.நிஜாமுத்தீன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.நகர நிர்வாகிகள் சலீம்,பிலால்,ஷாபீர் ,முபாரக், அல்தாப்,முன்னா, வகிக்த்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில அவைத்தலைவர் SS.நாசர் உமரி மற்றும் மக்கா பள்ளிவாசல் இமாம் உஸ்மான் ரஷாதி,சபூஃரா பள்ளிவாசல் முத்தவலி கவுஸ் பாஷா, துணை முத்தவலி அன்வர் பாஷா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING.
#குடியாத்தம்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்
14.06.2018

Top