வடசென்னை பகுதியில் மஜகவின் கொடியேற்றம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சி..!

image

image

சென்னை.ஏப்.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை மாவட்டம் திரு.வி.க. நகர் பகுதி 75-வது வட்டம்  (ஓட்டேரி கிளை) சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட செயலாளர் S.A. அஸிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இளைஞர் அணி செயலாளர் திருமங்கலம் J. ஷமிம் அவர்கள் போட்டியில் கலந்து கொண்டு
மனிதநேய சொந்தங்களுக்கு கழகத்தின் சார்பாக மஜக கிரிக்கெட் அணி பனியன்களை வழங்கி மனிதநேய ஜனநாயக கட்சியின்  கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்விற்கு மாவட்ட துணை செயலாளர் அன்வர் முன்னிலை வகித்தார், வட்ட செயலாளர் செல்வம் மற்றும் பொருளாளர் ரசாக் ஆகியோர் வரவேற்புரை மற்றும் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் மற்றும் ஜமாத்தார்கள், பொதுமக்கள்
கலந்து கொண்டார்கள்.

தகவல்:

தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
வடசென்னை.
17.4.2017.