You are here

ஆளுநர் சந்திப்பில் மஜக பொருளாளர் ஹாரூன் ரஷீது பங்கேற்பு…

image

image

சென்னை.ஏப்.18., தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி, விவசாயிகள் சங்க தலைவர்கள் கூட்டத்தில் மேதகு ஆளுநர் வித்யாசாகர்ராவ் மூலமாக பிரதமர் மோடியை வலியுறுத்தி தீர்மானங்களை அனுப்பி வைப்பது என முடிவெடுக்கபட்டது.

அதன்படி இன்று சந்திப்பதற்கு ஆளுநர் மாளிகை அனுமதி வழங்கியிருந்தது, அதனை தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்கள் ஆளுநரை சந்தித்து இன்று (18.04.2017) காலை 11 மணியளவில் கோரிக்கை மனுவினை ஆளுநரிடம் அளித்தனர்.

தமிழக ஆளுநர் வித்யசாகர் ராவை விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது M.Com, காங்கிரஸ் கட்சி சார்பில் பவன்குமார், தமாகா சார்பில் கோவை தங்கம், விடியல் சேகர், விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் சிவராஜசேகரன், ஜல்லிக்கட்டு மாணவர் இளைஞர் அமைப்பு சார்பில் வேலு, காயத்திரி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த 17 பிரதிநிதிகள் சந்தித்து விவசாயிகளுக்கான கோரிக்கை மனுவை அளித்தார்கள்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
சென்னை
18-04-2017

Top