கத்தார் தமிழர் சங்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி..! MKP நிர்வாகிகள் பங்கேற்பு..!!

தோஹா.ஜூன்.14., கத்தார் தமிழர் சங்க நிர்வாகிகள் சார்பாக நேற்று (13.06.2018) ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் நிகழ்ச்சியில் மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டல, மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் முதலவதாக கத்தார் மண்டல துணைச் செயலாளர் மீசல் செய்யது கனி சமூக நல்லிணக்க இப்தார், தமிழர்களின் மனிதநேய பண்புகள் போன்ற தலைப்பில் வாழ்த்துரை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து கத்தார் மண்டல ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹூசைன் நோன்பின் சிறப்பை பற்றி வாழ்த்துரை வழங்கினார்.

இறுதியாக கத்தார் தமிழர் சங்க தலைவர் DR. துரைசாமி குப்பன் அவர்களுக்கு கத்தார் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் கஃதீர் அஹ்மத் அவர்களுக்கு சால்வை போற்றி மரியாதை செய்தனர்.

இந்திகழ்ச்சியை சகோதரர் விஜயன் பாபு ராஜ், ரமா செல்வம் மற்றும் ஏனைய தமிழர் சங்க நிர்வாகிகள் சிற்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல்;
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#கத்தார்_மண்டலம்
14/06/2018