ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்..!

( மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி)

அன்பும், சகோதரத்துவமும், ஈகை குணமும் பூத்துக் குலுங்கும் இனிய மாதம்தான் ரமலான்.! இறைவனின் அருள் பெற வேண்டி, மாதம் முழுக்க ஏறத்தாழ 14 மணி நேரம் தொடர்ச்சியாக, தண்ணீர் கூட அருந்தாமல், நோன்பினை கடைப்பிடித்து, அதன் நிறைவாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது ஈதுள் ஃபித்ர் எனும் ரமலான் பண்டிகை.!

மகிழ்ச்சியில் மிகப் பெரிய மகிழ்ச்சி என்னவெனில், இல்லாதவர்களுக்கு செல்வங்களை கொடுத்து மகிழ்வது தான். அதனால் தான் ரமலான் பண்டிகையை “ஈகைத் திருநாள்” என வர்ணிக்கிறார்கள்.

பசியின் கொடுமையை உணர்தல், செல்வங்களை பகிர்ந்து கொடுத்தல், சகோதரத்துவத்தை வளர்த்தல், அன்பினை பகிர்தல் என ஒரு பண்டிகை மனித நேயத்தை வலியுறுத்துகிறது என்றால் அது ரமலான் பண்டிகைதான் என்பது ஒரு சிறப்பாகும்.!

இந்நன்னாளில், மனிதநேயம் ஓங்கவும், உரிமைப் போராட்டங்கள் வெல்லவும், அன்பும்-அமைதியும் செழிக்கவும், சமூக நீதி நிலைபெறவும் உறுதியேற்போம்.! அனைவருக்கும் மனம் நிறைந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
14.06.2018