புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பில் வீடுதேடி ஃபித்ரா வினியோகம்..!

புதுகை.ஜூன்.14., இஸ்லாமிய கலாச்சார பேரவை(IKP) மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் அக்னிபஜார் பகுதியில் மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் துவங்கிவைத்தார்.

மாவட்ட துணைச் செயலாளர்கள் அஜ்மீர் அலி, ஒளி முகம்மது, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன், மற்றும் நகர பொருளாளர் அப்துல் கரீம் முன்னிலை வாகித்தனர்.

மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் ஷாஜஹான் அனைவரையும் வாரவேற்றார்.
மாவட்ட செயலாளர் முபாரக் அலி மார்க்க விளக்க உரையாற்றினார்.

இறுதியில் நகர செயலாளர் ஜகுபர் சாதிக் நன்றி கூறினார்.

200 ஏழைகளுக்குரிய பெருநாள் தர்மம் (ஃபித்ரா) வாகனத்தில் வைத்து வீடுதேடி வினியோகம் செய்யப்பட்டது.

சமையல் பொருட்கள் ரொக்கம் உள்பட 35.000 மதிப்புள்ள பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.

தகவல்;
#இஸ்லாமிய_கலாச்சார_பேரவை (IKP)
#IKP_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்