சென்னை. ஜூன்.29., நேற்று (28-06-2018) தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக மாநில அளவிலான சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் சிறந்த மருத்துவராக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் #தோப்புத்துறையை சேர்ந்த #Dr_Y_அக்பர்_அலி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது மாநிலஅளவில் மிக சிறந்த ஒரு அங்கீகாரம் ; இது நேரிடையாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் அலுவலகத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசால் வழங்கப்படும் உயர்ந்த மகுடம். இவ்விருதை பெற்ற டாக்டர் அகபர் அலி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கு வருகை தந்து, #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #நாகை_சட்டமன்ற_உறுப்பினர் #மு_தமிமுன்_அன்சாரி மற்றும் கொங்கு இளைஞர் பேரவை #உ_தனியரசு_MLA ஆகியோரிடம் நேரில் சந்தித்து வாழ்த்துப்பேற்றார்கள். இச்சந்திப்பில் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் டாக்டர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை
Month:
திருப்பூரில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
திருப்பூர்.ஜுன்.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இ.ஹைதர்அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹமது முன்னிலை வகித்தார், இந்த நிர்வாகக் கூட்டத்தில் வருகின்ற 25-07-18 புதன்கிழமை அன்று திருப்பூர் மாநகரின் முக்கிய இடங்களில் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களை அழைத்து #மஜக கொடியேற்று விழா நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது, அந்த நிகழ்ச்சியை சிறப்பாக முடித்ததும். விரைவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி மற்றும் சிறப்பு விருந்தினர்களை அழைத்து பிரமாண்டமாக பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும் கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது. கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர், காதர் கான், மாவட்ட துணைச்செயலாளர்கள் அக்பர் அலி, மீரான், லியாகத் அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபில் ரிஸ்வான், மாவட்ட வர்த்தகர் அணிச்செயலாளர் சேக் பரித் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_மாவட்டம் 27-06-2018
சேலம்-சென்னை பசுமை வழி சாலை..! மஜகவின் நிலைப்பாடு குறித்து விளக்கம்..!!
சேலம்-சென்னை பசுமை வழி சாலை குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு மிகத் தெளிவானது. நாங்கள் எந்த திட்டத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதும் இல்லை, எதிர்ப்பதும் இல்லை. பிறரை திருப்திப்படுத்தும் அரசியலையும் முன்னெடுப்பதும் இல்லை. மாறாக மனசாட்சிக்கு விரோதமில்லாத வகையிலேயே பிரச்சனைகளை அணுகுகிறோம். நிலத்தை பாழ்படுத்தும் #மீத்தேன், #ஹைட்ரோ_கார்பன், #நியூட்ரினோ போன்ற திட்டங்களையும் #ஸ்டெர்லைட் போன்ற மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும் சமரசமின்றி எதிர்க்கிறோம். நிலம், நீர், காற்று இம்மூன்றின் இயற்கை தன்மை பாதிக்கப்படக்கூடாது என்ற வகையிலேயே எமது கொள்கை அணுகுமுறை உள்ளது. அதே நேரத்தில் வேலைவாய்ப்புகளை தரக்கூடிய சூழலை கெடுக்காத அனைத்து தொழிற் சாலைகளையும் வரவேற்கிறோம். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அணைக்கட்டுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், பெரிய மருத்துவ மனைகள், கல்விக்கூடங்கள், அகல விரைவுச் சாலைகள், ரயில்வே சாலைகள், பெரிய பாலங்கள் இவையெல்லாம் அவசியமானவை என்று வரவேற்கிறோம். இது போன்ற கட்டமைப்புகளை உருவாக்கும்போது, பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீட்டையும் மாற்று இடங்களையும் வழங்க வேண்டும் என்பதே எமது நிலைபாடாகும். இன்று பயன்பாட்டில் இருக்கும் இது போன்ற திட்டமைப்புகள் இந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில்தான் கம்பத்தில் இயக்குனர் கெளதமன் கைதை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக நான் கருத்து
கவர்னர் குறித்த பேச தமிமுன் அன்சாரிக்கு அனுமதி மறுப்பு..!
சென்னை.ஜூன்.25., கவர்னர் அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆட்சேபம் செய்து இன்று மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் சபாநாயகரிடம் அனுமதி கோரினார். அனுமதி மறுக்கப்பட்டதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது. #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கவர்னரின் மீறல்கள் குறித்து நான் பேச வேண்டும் என எழுந்து நின்று சபாநாயகரிடம் அனுமதி கோரினார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து அவரை அமருமாறு கூறினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம் 25.06.2018
கொள்ளுமேடு மஜக நகர செயலாளர் இல்ல திருமண விழா..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்ப்பு..!
கடலூர்.ஜூன்.25., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் தெற்கு மாவட்டம், கொள்ளுமேடு நகர செயலாளர் முஹம்மது ஹாரிஸ் அவர்களின் இல்ல திருமண விழா நேற்று (24-06-18) ஞாயிற்றுக்கிழமை தைக்கால் ARS திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாருன்_ரசீது M.com, அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்புரை நிகழ்த்தினார்கள். உடன் மாநில செயலாளர் J.சீனி முஹம்மது, மாநில துணை செயலாளர் திருமங்கலம் ஷமிம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாஹிர்உசேன், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், மற்றும் லால்பேட்டை, கொள்ளுமேடு, நெய்வேலி, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கடலூர்_தெற்கு_மாவட்டம்.