கோவை.மே.04., #மனிதநேய_ஜனநாயக_கட்சி கோவை மாநகர் மாவட்ட #மருத்துவ_அணி நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் அபு தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹீம், பகுதி நிர்வாகிகள் அசாருதீன், அப்துல்ஹக்கீம், மற்றும் கிளை மருத்துவ அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. கோவை மாவட்ட மருத்துவஅணி சார்பாக 3மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு பகுதியை தேர்வு செய்து மருத்துவ முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது., 2. கோவை மாவட்டத்தில் விரைவாக மருத்துவ சேவைமையம் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. 3. பொது மக்களுக்கு அவசர கால விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு பெற்று தருவது என தீர்மானிக்கப்பட்டது. 4. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மாவட்ட மருத்துவ அணி சார்பாக பிரம்மாண்டமான இரத்ததான முகாம், பல்துறை மருத்துவ முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 5. கோவை மாவட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு மாதம் ஒரு முறை மருத்துவர் மூலம் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 6. கோவை மாவட்ட மருத்துவஅணி சார்பில் இரத்ததான சேவைக்காக மொபைல் ஆப் (செயலி) தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 04.05.18
Month:
கோடை விடுமுறையில் பயிற்சி வகுப்புகளை அனுமதிக்க கூடாது..! மஜக தமிழக அரசுக்கு கோரிக்கை..!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) பள்ளிக்கூட மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பது கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக இருக்கிறது. பாட சிந்தனைகள், புத்தக சுமைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு மே மாதம் முழுவதையும் தங்களின் மகிழ்ச்சியான பொழுது போக்குக்காக ஒதுக்குகிறார்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்வது, உறவினார்களின் இல்லங்களுக்கு சென்று தங்குவது, விளையாட்டுகளில் ஈடுபடுவது, விழாக்களில் பங்கேற்பது என மனதை உற்சாகப்படுத்திக் கொள்கிறார்கள் . இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் மே மாதத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு #சிறப்பு_பயிற்சி_வகுப்பு-களை நடத்துகிறார்கள். இந்த போக்கு இப்போது அரசு பள்ளிகளிலும் பரவியிருக்கிறது. எந்த நோக்கத்திற்காக மே மாத கோடை விடுமுறை அளிக்கப்படுகிறதோ. அதற்கு எதிராக சில பள்ளிக்கூடங்கள் செயல்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. இதை பெற்றோர்கள் விரும்பவில்லை மாணவ, மாணவிகளும் விரும்பவில்லை. எனவே, கடும் கோடை வெயிலில் பிள்ளைகளுக்கு மன சோர்வை ஏற்படுத்தும், சிறப்பு பயிற்சி வகுப்புகளை அரசு பள்ளிக்கூடங்களும், தனியார் பள்ளிக்கூடங்களும் நடத்த தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும். சிறப்பான முறையில் செயல்படும் #பள்ளிக்_கல்வித்_துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் திரு.செங்கோட்டையன் அவர்கள், இது குறித்து தமிழக முதல்வருடன் பேசி உரிய
மஜக வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம்! இளைஞர் அணி மாநில செயலாளர் பங்கேற்பு!
வேலூர்.மே.03., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நேற்று (02.05.2018) மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் #முஹம்மது_யாஸீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் #S_G_அப்சர்_சையத் கலந்து கொண்டார். இந்நிர்வாகக் குழு கூட்டத்தில் வருங்காலத்தில் செய்ய வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து கிழ்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டது. 1. தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல்., 2. புதிய கிளைகள் உருவாக்கி அனைத்து தரப்பு பாமர மக்களுடன் உயிரோட்டமான தொடர்பில் இருத்தல்., 3.வேலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள இது வரை நியமிக்கப்படாத புதிய நகரங்களில் நிர்வாகிகளை நியமித்தல்., 4. நாட்டையும், சமூகத்தையும் வளமான வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கான பெரும்பங்கு இளையோர்களிடம் உண்டு என்பதை உணர்த்தும் வகையில் மாவட்ட இளைஞர் அணி சார்பாக அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துதல். 5. மாவட்ட இளைஞர் அணி சார்பாக, சுற்றுசூழலை பாதுகாக்க, பசுமையான மிகச் சிறந்த சூழலை உருவாக்க வேலூர் மாவட்டம் முழுவதும் மரக்கன்று நடுதல், 6. ரமலான் மாதத்தில் வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக சிறப்பாக இஃதியார் நிகழ்ச்சி நடத்துதல் ஆகிய செயல்
மஜக கோவை மாவட்ட தலைமையகத்திற்கு மாநில நிர்வாகிகள் வருகை!
கோவை.மே.03.மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட தலைமையகத்திற்கு மாநில நிர்வாகிகள் வருகை தந்தனர். இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் J.S.ரிபாயி ரஷாதி, இணை பொதுச்செயலாளர் மைதீன்உலவி, துணை பொதுச்செயலாளர் மன்னைசெல்லச்சாமி, ஆகியோர் மாவட்ட அலுவலகத்தை பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். இச்சந்திப்பில் மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் PM.முகம்மதுரபீக், கிணத்துகடவு பகுதி செயலாளர் ஹாருண்ரஷீது, பொருளாளர் காதர், துணை செயலாளர் அபு, மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 03.05.18
புதுக்கோட்டை மாவட்டம் கொழுவனூரில் மதுப்பானக்கடையை அகற்ற கோரி சாலை மறியல்..! மஜக பங்கேற்பு..!!
மீமிசல். மே.03., புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் மீமிசல் அருகே உள்ள வேள்வரை பஞ்சாயத்துக்குட்பட்ட கொழுவனூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதில் #CPIM மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் சலோமி, பமக கிழக்கு மாவட்ட செயலாளர் சக்தி செல்வம், #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் முபாரக் அலி, #மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ், மஜக மாவட்ட துணை செயலாளர் செய்யது அபுதாஹிர், #நாம்_தமிழர்_கட்சி தொகுதி பொறுப்பாளர் டேவிட், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலையில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.DSP காமராசு தலைமையில், ஆய்வாளர் பாலாஜி உட்பட 50க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர், வட்டாச்சியர் கிருஷ்ணவேணி, கலால் துணை ஆணையர் பரணி ஆகியோர் டாஸ்மார்க் கடையை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்னும் ஓரிரு தினங்களில் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாத பட்சத்தில் #கலெக்டர்_ஆபிஸ்_முற்றுகையிட்டு ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகள் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என்று கூறி