குவைத்.ஜுன்.17., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை (IKP) மஹபுலா கிளை சார்பாக நடத்திய "மணங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சி" நேற்று16/06/2017 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மஹபுலாவில் மண்டல இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் சகோ. இளையான்குடி சீனி முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மஹபுலா கிளை துணை செயலாளர் சகோ.ஏர்வாடி ஹசன் முகம்மது அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்க. கிளை து.செயலாளர் சகோ.நெல்லை முகம்மது அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகிக்க கிளை பொருளாளர் சகோ.கோட்டைபட்டினம் ஜாபர் அலி அவர்கள் சிற்றுரை நிகழ்த்திய பின் மண்டல செயலாளர் சகோ.முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் நோன்பால் ஏற்படும் மாற்றங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக கிளை செயலாளர் சகோ. கோட்டைபட்டினம் அப்துல் காதர் அவர்கள் நன்றியுரை கூறிய பின் இஃப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிதனர். தகவல்; மனிதநேய கலாச்சார பேரவை (IKP) மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING குவைத் மண்டலம். 55278478, 60338005, 65510446.
Month:
ஜெமஷாவுக்கு மஜக பொதுச் செயலாளர் இரங்கல்…
( மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரியின் வாட்ஸ் அப் அறிக்கை...) மஜகவின் கோவை தெற்குப் பகுதி செயலாளராக சிறப்பாக பணியாற்றி வந்த சகோதரர் ஜெமஷா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பது ஆழ்ந்த வருத்தமளிக்கிறது . ( இன்னா லில்லாஹி ... ) வாழ் வேண்டிய இளம் வயதில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது கோவை மாவட்ட மஜகவுக்கு ஒரு முக்கிய இழப்பு என்பதில் ஐயமில்லை . அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் , கோவை மாவட்ட மஜகவினருக்கும் தலைமையின் சார்பில் ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் . இறைவன் அவரது அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து , ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை வழங்க பிரார்த்திக்கிறோம் . இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 16.06.2017
சட்டசபையில் நேற்று கல்வி மானியக் கோரிக்கையில் M. தமிமுன் அன்சாரி MLA உரையின் பாகம்-1
காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்...! கவிக்கோ. அப்துல் ரஹ்மான் பெயரில் பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும்...!! சட்டமன்றத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை ! (சட்டசபையில் 15.06.17 அன்று கல்வி மானியக் கோரிக்கையில் பேசிய உரையின் பாகம் - 1) மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே....! தமிழ் நாட்டின் ரவீந்திரநாத் தாகூராகவும் , கவி அல்லமா இக்பாலாகவும் , தமிழ் நாட்டின் வெல்வியாகவும் வாழ்ந்த கவிக்கோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் கடந்த 02.06.17 அன்று மரணமடைந்தார். உலக கவிதைகளை தமிழுக்கு தந்தவர். தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர். அவர்தான் ஹைகூ, சர்ரியலிச வடிவ கவிதைகளை தமிழுக்கு தந்தவர். அவரை சிறப்பிக்கும் பொருட்டாக, சென்னை பல்கலைக் கழகத்தில் நவீன தமிழ் கவிதைகளுக்கான உயர் ஆய்வு இருக்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதற்கு 1 கோடி ரூபாய் செலவாகும். இது ஒரு பிரச்சனை எனில், தமிழக அரசு 50 லட்ச ரூபாயை ஒதுக்கினால், மீதி 50 லட்ச ரூபாயை கவிக்கோ ஆதரவாளர்கள், சமூக பிரமுகர்களிடம் பெற நான் முயற்சி செய்கிறேன். இதற்கு தமிழக அரசு ஏற்பாடு
மஜக மாநில பொருளாளர் SS.ஹாருண் ரஷீது கோவை வருகை..! பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு..!!
கோவை.ஜூன்.16., இன்று கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி குனியமுத்தூர் தெற்கு பகுதி துணைசெயலாளர் ஜமேஷா அவர்கள் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார்கள். (இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி ராஜிவூன்...) அவரது நல்லடக்க நிகழ்வில் பங்கேற்க மஜக பொருளாளர் SS.ஹாருண் ரஷீது கோவை வந்தார்கள், நல்லடக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு கடந்த வாரம் கோவை G.M.நகர் பகுதியில் மின்சாரம் தாக்கி மரணமடைந்த சல்மான் மற்றும் சக்கீலாபானு அவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். பின்பு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்கள். இந்நிகழ்வில் மாநில செயலாளர் சுல்தான்அமீர், மாவட்ட பொருளாளர் ATRபதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், சிங்கை சுலைமான் மற்றும் பகுதி நிர்வாகிகள் ஜாபர்,சபீர், Gmநகர் அக்பர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்!!! தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 16.06.2017
காயல் நகர மஜக சார்பில் நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்வு…
தூத்துக்குடி.ஜூன்.16., இன்று காயல்பட்டிணம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி மிகசிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜீப் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார், மாவட்ட துணைச் செயலாளர் ஜபருல்லாஹ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார் இதில் மாவட்ட நிர்வாகிகள், காயல் நகர நிர்வாகிகள், ஆத்தூர் நகர நிர்வாகிகள், மேலும் SDPI, காக்கும் கரங்கள், நடப்பது என்ன வாட்ஸ்அப் குழும நிர்வாகிகள் மற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, தூத்துக்குடி மாவட்டம், #MJK_IT_WING 16.06.2017