( மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரியின் வாட்ஸ் அப் அறிக்கை…)
மஜகவின் கோவை தெற்குப் பகுதி செயலாளராக சிறப்பாக பணியாற்றி வந்த சகோதரர் ஜெமஷா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பது ஆழ்ந்த வருத்தமளிக்கிறது . ( இன்னா லில்லாஹி … )
வாழ் வேண்டிய இளம் வயதில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது கோவை மாவட்ட மஜகவுக்கு ஒரு முக்கிய இழப்பு என்பதில் ஐயமில்லை .
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் , கோவை மாவட்ட மஜகவினருக்கும் தலைமையின் சார்பில் ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் .
இறைவன் அவரது அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து , ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை வழங்க பிரார்த்திக்கிறோம் .
இவண்
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
16.06.2017