சட்டசபையில் நேற்று கல்வி மானியக் கோரிக்கையில் M. தமிமுன் அன்சாரி MLA உரையின் பாகம்-1

image

காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்…!

கவிக்கோ. அப்துல் ரஹ்மான் பெயரில் பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும்…!!

சட்டமன்றத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை !

(சட்டசபையில் 15.06.17 அன்று கல்வி மானியக் கோரிக்கையில் பேசிய உரையின் பாகம் – 1)

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே….!

தமிழ் நாட்டின் ரவீந்திரநாத் தாகூராகவும் , கவி அல்லமா இக்பாலாகவும் , தமிழ் நாட்டின் வெல்வியாகவும் வாழ்ந்த கவிக்கோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் கடந்த 02.06.17 அன்று மரணமடைந்தார்.

உலக கவிதைகளை தமிழுக்கு தந்தவர். தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர். அவர்தான் ஹைகூ, சர்ரியலிச வடிவ கவிதைகளை தமிழுக்கு தந்தவர்.

அவரை சிறப்பிக்கும் பொருட்டாக, சென்னை பல்கலைக் கழகத்தில் நவீன தமிழ் கவிதைகளுக்கான உயர் ஆய்வு இருக்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதற்கு 1 கோடி ரூபாய் செலவாகும். இது ஒரு பிரச்சனை எனில், தமிழக அரசு 50 லட்ச ரூபாயை ஒதுக்கினால், மீதி 50 லட்ச ரூபாயை கவிக்கோ ஆதரவாளர்கள், சமூக பிரமுகர்களிடம் பெற நான் முயற்சி செய்கிறேன். இதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே…!

முன்னாள் முதல்வர் பாரத ரத்னா, பொன்மனச் செம்மல் ஐயா MGR அவர்கள் முதல்வராக இருந்தபோது கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களது வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்த்தார். அது பிறகு எடுக்கப்பட்டு விட்டது, அதை மீண்டும் பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தகவல் தொகுப்பு;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
16.06.2017