You are here

ஈரோடு இடைத்தேர்தல்… காங்கிரஸ் கட்சிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டம் இன்று (31.01.2023) சென்னை திருவல்லிக்கேணி மெரினா பேலஸில் நடைபெற்றது.

அங்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஊடகப்பிரிவு தலைவர் திரு. கோபண்ணா அவர்களும் மாநில துணைத்தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் பொதுச்செயலாளர் S.A.வாசு அவர்களும் வருகை தந்து ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆதரவை கோரினார்.

அதன் அடிப்படையில் மஜக தலைமை நிர்வாக குழு கூடி ஆலோசித்து, தமிழ்நாட்டின் நலன் கருதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. EVKS.இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சையது அகமது ஃபாருக் தலைமையில் பத்து பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக முழு வீச்சில் பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

Top