சென்னை.ஜூன்.24., நேற்று மத்திய சென்னை மாவட்டம் ஐஸ்ஹவுஸ் பகுதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் பக்கேற்பதாக இருந்த விஜயதாரணி MLA அவர்கள் பெரம்பூரில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வர தாமதம் ஆனதால். தொலைபேசியில் தொடர்பு கொண்டு வர முடியாமைக்கு வருத்தம் தெரிவித்தார். மஜக சார்பில் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது M.com, மாநில செயலாளர் N.A.தைமியா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகிகள் பிஸ்மி, பீர் முகம்மது உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்படு செய்திருந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. மத்திய சென்னை. #MJK_IT_WING 23.06.2017
Month:
கோவை மஜக அலுவலகம் திறப்பு மற்றும் இப்தார் நிகழ்ச்சி : மாநில செயலாளர் பங்கேற்பு!
கோவை.ஜூன்.23., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய பகுதிக்குட்பட்ட அல் அமீன் காலனி கிளை அலுவலகத்தை மஜக மாநில செயலாளர் சுல்தான் அமீர் திறந்துவைத்து நிர்வாகிகளிடையே நிகழ்கால அரசியலைப் பற்றி உறையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMSஅப்பாஸ், ரபீக், அமீர் அப்பாஸ் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் பகுதி கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அல்அமீன் காலனி கிளை நிர்வாகத்தின் சார்பில் இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி. கோவை மாநகர் மாவட்டம் #MJK_IT_WING 23.06.2017
எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலினுடன் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சந்திப்பு…
சென்னை.ஜூன்.23., இன்று சட்டப்பேரவை நடைபெற்றுக்கொண்டிருந்த போது எதிர்கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் சந்தித்தனர். 14ஆண்டுகள் நிறைவுசெய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது குறித்தும், இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு கேட்டும் இச்சந்திப்பு நடைபெற்றது. அதேபோல் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் K.P.ராமசாமி , முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் அபூபக்கர் MLA, ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, சட்டப்பேரவை வளாகம். #MJK_IT_WING 23.06.2017
ஜனாதிபதி தேர்தலில் மீராகுமாருக்கு மஜக ஆதரவு.
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை) இந்தியாவின் குடியரசு தலைவர் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீராகுமார் அவர்களை தங்களின் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். வெளிநாட்டு தூதர், மத்திய அமைச்சர், மக்களவை சபாநாயகர் என பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர் என்பதும், முன்னாள் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் மகள் என்பதும், இவர் தகுதிமிக்க வேட்பாளர் என்பதை நிரூபிக்கிறது. இந்திய அளவில் தலித் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அவரை குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரிப்பது என்று மனிதநேய ஜனநாயக கட்சி முடிவு செய்திருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவண்; M.தமிமுன் அன்சாரி பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 23.06.2017
சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி MLA ஆவேச முழக்கம்!
#மே17.திருமுருகன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்..! #சிறை நோயாளிகள் மீரான் மைதீன், அபூதாகிரை விடுதலை செய்ய வேண்டும்...! #MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வேண்டும்...! #மனசாட்சியை மூடி வைக்காதீர் என சக உறுப்பினர்களை பார்த்து உருக்கம்... #சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி ஆவேச முழக்கம்! (மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறைத்துறை மானிய கோரிக்கையில் 22.06.2017 அன்று பேசிய உரையின் சுருக்கம்) மண்புமிகு பேரவை தலைவர் அவர்களே... குண்டர் சட்டத்தை வாபஸ் பெறுக...! மே.17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் உள்ளிட்ட அவ்வியக்கத்தை சேர்ந்த நால்வர் மீதும், மீத்தேன் திட்ட எடுப்புக்கு எதிராக போராடிய பேராசிரியர்.செயராமன் மீதும் போடப்பட்டிருக்கும் குண்டர் தடுப்புச் சட்டத்தை இந்த அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ் தேசியவாதிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். பூந்தமல்லி சிறையில் இருந்து மற்றுக...! வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட மண்ணடி அப்துல்லாஹ் உள்ளிட்ட 16 கைதிகள் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காற்று வசதியற்ற மிகக் குறுகிய அறையில் 4பேர் வீதம் கொடூரமாக அடைக்கப்பட்டுள்ளனர். லாக்கப் நேரம் தவிர்த்து இதர நேரங்களில் இவர்கள் திறந்த வெளியில் நடமாட அனுமதிக்கப்படுவதில்லை. இவர்களை உடனடியாக புழல் சிறைக்கு