சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி MLA ஆவேச முழக்கம்!

#மே17.திருமுருகன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்..!

#சிறை நோயாளிகள் மீரான் மைதீன், அபூதாகிரை விடுதலை செய்ய வேண்டும்…!

#MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வேண்டும்…!

#மனசாட்சியை மூடி வைக்காதீர் என சக உறுப்பினர்களை பார்த்து உருக்கம்…

#சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி ஆவேச முழக்கம்!

(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறைத்துறை மானிய கோரிக்கையில் 22.06.2017 அன்று பேசிய உரையின் சுருக்கம்)

மண்புமிகு பேரவை தலைவர் அவர்களே…

குண்டர் சட்டத்தை வாபஸ் பெறுக…!

மே.17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் உள்ளிட்ட அவ்வியக்கத்தை சேர்ந்த நால்வர் மீதும், மீத்தேன் திட்ட எடுப்புக்கு எதிராக போராடிய பேராசிரியர்.செயராமன் மீதும் போடப்பட்டிருக்கும் குண்டர் தடுப்புச் சட்டத்தை இந்த அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ் தேசியவாதிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

பூந்தமல்லி சிறையில் இருந்து மற்றுக…!

வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட மண்ணடி அப்துல்லாஹ் உள்ளிட்ட 16 கைதிகள் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காற்று வசதியற்ற மிகக் குறுகிய அறையில் 4பேர் வீதம் கொடூரமாக அடைக்கப்பட்டுள்ளனர். லாக்கப் நேரம் தவிர்த்து இதர நேரங்களில் இவர்கள் திறந்த வெளியில் நடமாட அனுமதிக்கப்படுவதில்லை. இவர்களை உடனடியாக புழல் சிறைக்கு மாற்றுமாறு இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

பேரறிவாளன்-ராபர்ட் பயாஸ்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் கடும் நோயினால் பதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரோல் கிடைக்கவில்லை. அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீரோடு கதறுகிறார். அவருக்கு பரோல் வேண்டும்.

அதேபோல் ராபர்ட் பயாஸ் அவர்கள் என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள் என குமுறியிருக்கிறார் அவர் 26 வருடங்கள் கடந்துவிட்டார்.

இவ்விஷங்களில் ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர் கட்சி உறுப்பினர்களும் மனசாட்சியை மூடி வைக்காதீர்கள் என இந்த அவையை பார்த்து கேட்டுக்கொள்கிறேன்.(இக்கருத்தை ஆதரித்து உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டினர்)

சிறைநோயாளிகளை விடுதலை செய்க…!

கோயமுத்தூர் அபூதாகிர் என்ற கைதிக்கு அனைத்து உடல் உறுப்புகளும் சேதமாகிவிட்டது. அதுபோல் திண்டுக்கல் மீரான் மைதீன் என்ற கைதிக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு வாடி வருகிறார். இவர் மருத்துவ மனையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியும், சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இவருக்கு சிறைத்துறை சார்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் வாழ்வின் கடைசியில் உள்ள அபுதாஹிர் போன்ற கைதிகளை தமிழ்நாடு சிறை விதிகள் 632, 633, 635 ஆகியவற்றின் கீழ் விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஆயுள்தண்டனை கைதிகள்…

14ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள்தண்டனை கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்ய வேண்டும் என்று இந்த அவையில் பலமுறை பேசி உள்ளேன், இப்போதும் கேட்கிறேன்.

இந்த விஷயத்தில் கருத்துவேறுபாடுகளை பார்க்காமல், கட்சி வேறுபாடுகளை  பார்க்காமல், அரசியல் வேறுபாடுகளை பார்க்காமல் உறுப்பினர்கள் முடிவெடுக்க வேண்டும்.

இதை நான் மட்டும் பேசுவதாக கருதவேண்டாம், மாண்புமிகு உறுப்பினர்கள் அண்ணன் தனியரசு, அண்ணன் கருணாஸ் ஆகியோரும் சேர்த்து ஒரே குரலில் பேசியிருக்கிறோம் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

திமுக ஆட்சியில் ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்யப்பட்டது குறித்து சுப்ரமணியன் சுவாமி ஒரு வழக்கு
தொடுத்திருந்தார். அதை சுப்ரிம் கோர்ட் தள்ளுபடி செய்தது. எனவே தமிழக அரசு 161 பிரிவை பயன்படுத்தி ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர் பாரதரத்னா பொன்மனச் செம்மல் MGR அவர்களின் நூற்றாண்டு விழா காலம் இது. அதை அரசு கொண்டாடுகிறது, அதை முன்னிட்டு 14ஆண்டுகள் நிறைவு  செய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

விடுதலை குறித்து அரசு பரிசீலிக்கும்…

இவர் பேசி முடிந்ததும் சட்டத்துறை அமைச்சர் C.V.சண்முகம் அவர்கள் பதிலளித்தார். மீரான் மைதீன் மருத்துவ ஏற்பாடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் MGR நூற்றாண்டை முன்னிட்டு 14ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் கைதிகளை முன் விடுதலை செய்வது குறித்து அரசு பரிசீலிக்கவும், முதல்வரிடம் எடுத்து கூறி உள்ளதாகவும், விரைவில் அரசிடம் இருந்து நல்ல செய்தி வரும் என்றும் நம்பிக்கையோடு கூறினார்.