மார்ச்.02.,
கோவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற வாழ்வுரிமை மாநாடு மாபெரும் எழுச்சியுடன் நடைப்பெற்றது.
அதற்காக 1மாதமாக தியாக மனப்பான்மையுடன் இரவு பகலாக உழைத்த கோவை மாவட்ட அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கு தலைமையின் சார்பில் விருந்தோம்பல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் பங்கேற்று பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி,MLA. அவர்கள் உரையாற்றியதாவது.
https://m.facebook.com/story.php?story_fbid=2308524319247330&id=700424783390633
ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியை இம்மாநாடு கண்டுள்ளது செம்மொழி மாநாட்டிற்கு இணையான ஒரு மாநாடென்றால் அது மஜக வின் மாநாடுதான் என பத்திரிக்கையாளர்கள் கூறியதை நினைவூட்டினார்.
மேலும் இம்மாநாட்டிற்காக கோவையில் மாநில பொருளாளரும் மாநாட்டுக்குழு தலைவருமான எஸ்.எஸ். ஹாருண்ரஷீது, அவர்கள் தலைமையில் பிரச்சாரக்குழு, வரவேற்புக்குழு, நிதிக்குழு, மைதான பணிகள் குழு, உள்ளிட்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு.
அந்த குழுக்களின் தொடர் சூறாவளி பணிகளை மிகவும் விலாவரியாக சிலாகித்து பேசினார்.
மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து சொந்த காசுகளை செலவு செய்து தன்னெழுச்சியுடன் பொதுமக்களும், ஜமாத்தினர்களும், திரளாக வருகை தந்ததை பற்றி கூறியவர் அதற்காக உழைத்து தமிழகம் முழுவதும் உள்ள மஜக நிர்வாகிகளின் தியாக உழைப்பை நினைவுபடுத்தினார்.
தொடர்ந்து நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியோடு உரையாற்றி அவர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களுடன் நள்ளிரவுவரை இருந்து விருந்தோம்பலில் கலந்து கொண்டார்.
மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது, அவர்கள் உரையாற்றியதாவது கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நாங்கள் இங்கு முகாமிட்டு தங்களின் மாநாட்டு பணிகளை மேற்பார்வை செய்து வருகிறோம் சிறப்பாக அனைவரும் அவரவர்க்கு வழங்கப்பட்ட பணிகளை செய்து வந்தீர்கள் அந்த பணிகளுக்கிடையில் தடைகள் வந்தபோதும் அதை முறியடித்து பணியாற்றியதை சுட்டிக்காட்டினார்.
அவைத்தலைவர் நாசர்உமரி, அவர்கள் பேசும் போது கோவை மக்கள் மிகவும் கடினமான பணியைக்கூட இலகுவாக செய்பவர்கள் என பாராட்டி பேசினார்.
இணை பொதுச் செயலாளர் J.S.ரிபாயி, அவர்கள் பேசும் போது இந்த மாநாட்டின் வெற்றிக்கு முதலில் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் எனக்கூறி மாநாட்டு பணிகளின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
துணை பொதுச் செயலாளர்கள் சையது அஹமது பாருக், அவர்கள் கொங்கு மண்டல மாநாட்டு ஒருங்கிணைப்பை பற்றி பேசி வாக்களித்ததை விட அதிகமான மக்கள் ஈரோடு பகுதிகளிலிருந்து கலந்து கொண்டதை சுட்டிக்காட்டினார்.
சுல்தான்அமீர், அவர்கள் இம்மாநாடு பணிகள் தொடங்கியது முதல் இறுதி வரை நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்டார்.
மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், அவர்கள் கோவை நிர்வாகிகளின் பணிகளை பாராட்டியதோடு இம்மாநாட்டில் டெல்டா பகுதி மக்களின் பங்களிப்பு குறித்து பேசினார்.
இதில் மாநில துணை செயலாளர்கள் காயல் சாகுல்அமீது, நாகை முபாரக், இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா பஷீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர்கள் தாரிக், கோவை சம்சுதீன்.
மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் குனிசை ஷாஜகான், அபுதாஹிர், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், K.A.பாருக், சிங்கை சுலைமான், முஸ்தபா, அபு, மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
01.03.2020