ஜனாதிபதி தேர்தலில் மீராகுமாருக்கு மஜக ஆதரவு.

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை)

இந்தியாவின் குடியரசு தலைவர் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீராகுமார் அவர்களை தங்களின் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.

வெளிநாட்டு தூதர், மத்திய அமைச்சர், மக்களவை சபாநாயகர் என பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர் என்பதும், முன்னாள் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் மகள் என்பதும், இவர் தகுதிமிக்க வேட்பாளர் என்பதை நிரூபிக்கிறது.

இந்திய அளவில் தலித் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அவரை குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரிப்பது என்று மனிதநேய ஜனநாயக கட்சி முடிவு செய்திருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்;
M.தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
23.06.2017