எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலினுடன் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சந்திப்பு…

சென்னை.ஜூன்.23., இன்று சட்டப்பேரவை நடைபெற்றுக்கொண்டிருந்த போது எதிர்கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் சந்தித்தனர்.

14ஆண்டுகள் நிறைவுசெய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது குறித்தும், இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு கேட்டும் இச்சந்திப்பு நடைபெற்றது.

அதேபோல் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் K.P.ராமசாமி , முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் அபூபக்கர் MLA, ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
சட்டப்பேரவை வளாகம்.
#MJK_IT_WING
23.06.2017