ஜமாத்துல் உலமா தலைவருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு…!

image

கடலூர்.செப்.27., இன்று கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் ஜமாத்துல் உலமா தலைவர் மொளலானா A.E.M அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் இல்லத்திற்கு சென்று மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ சந்தித்து உரையாடினார்.

நடப்பு அரசியல் சூழ்நிலைகளை கையால்வது குறித்தும், சமுதாய அரசியல் நிலவரங்கள் குறித்தும் விவாதித்தனர். மஜகவின் மீது ஹஜ்ரத் அவர்கள் காட்டும் அன்பும், ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது தலைமை ஒருங்கிணைப்பாளர் மொளலா நாசர், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுத்தின், மாநில விவசாய அணிச்செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கடலூர் _தெற்கு_மாவட்டம்.