You are here

மஜக இஃப்தார்..! மஜக தலைவர்களுடன் தனியரசு, கருணாஸ் பங்கேற்பு..!!

image

image

சென்னை.ஜூன்.24., நேற்று மத்திய சென்னை மாவட்டம் ஐஸ்ஹவுஸ் பகுதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் சார்பில் பக்கேற்பதாக இருந்த விஜயதாரணி MLA அவர்கள் பெரம்பூரில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வர தாமதம் ஆனதால். தொலைபேசியில் தொடர்பு கொண்டு வர முடியாமைக்கு  வருத்தம் தெரிவித்தார்.

மஜக சார்பில் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது M.com, மாநில செயலாளர் N.A.தைமியா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகிகள் பிஸ்மி, பீர் முகம்மது உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்படு செய்திருந்தனர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
மத்திய சென்னை.
#MJK_IT_WING
23.06.2017

Top