கோவை.ஜன.23.,கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல சிறிய உணவகங்கள் மூடப்பட்டுள்ளது, இதன் காரணமாக ஆதரவற்றவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ளவர்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக பயண பட்டவர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் உணவு கிடைக்காமல் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சியின், கோவை வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் சுல்தான், அவர்களின் தலைமையில் மூன்றாம் கட்டமாக இந்த வாரமும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், ஊட்டி ரோடு, சந்தைக் கடை, ஓடந்துறை, மைதானம் மருத்துவமனை ஆகிய பகுதிகளில் உணவுத் தேவை உள்ளவர்களை கண்டறிந்து 200 க்கும் மேற்பட்டோருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட பொருளாளர் A. ஷேக் மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் M.காஜா மைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் M.ஆரிஃப் அப்பாஸ், NMT.முபாரக், N.மகேந்திரன் M.முஹம்மது ரஃபி, இளைஞரணி மாவட்ட செயலாளர் R. ரபிக், இளைஞரணி மாவட்ட பொருளாளர் A.சதாம் உசேன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர்கள் ராஜா முஹம்மது, ஜாபர் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் I.முஹம்மது ஹாரிஸ், முன்னாள் மாவட்ட பொருளாளர்கள் SMR.பாரி, ஹக்கீம், மற்றும் , M ரமீஜ் ராஜா, S.தெளபிக், முஹம்மது தாரிக்,
A.முஹம்மது இர்பான், கரட்டுமேடு காஜா, ஆகியோர் உணவு வினியோகிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_வடக்கு_மாவட்டம்
23.01.2022