புதுக்கல்லூரி துணை முதல்வர் கமால் நாசர் அவர்கள் இல்ல திருமணம்.! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு.!!

சென்னை.ஜன.24., சென்னை புதுக்கல்லூரியின் துணை முதல்வர் அவர்களை இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்து உரையாடினார்.

கடந்த 16.01.2022 அன்று நடைப்பெற்ற அவரது மகள் அனீஸ் பாத்திமா அவர்களின் திருமணத்திற்கு வர இயலாத நிலையில் இன்று நேரில் சென்று திருமண வாழ்த்தை கூறினார். அப்போது மணமக்களுக்காக “தி 100” நூலை பரிசளித்தார்.

பிறகு புதுக்கல்லூரியின் கல்விப்பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து உரையாடினர். அப்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் பொதுச்செயலாளர் அவர்களை சந்தித்து மரியாதை நிமித்தமாக உரையாடினர்.

உடன் மஜக இளைஞரணி செயலாளர் அஸாருதீன் மற்றும் மாணவர் இந்தியா பொருளாளர் பஷீர் அஹமது ஆகியோர் உடனிருந்தார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்தியசென்னை
24.01.2022