தஞ்சை.ஜுன்.04., தஞ்சாவூரில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தோழர் P.R.பாண்டியன் தலைமையில் 5 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது . நான்காம் நாளில் போராட்டத்தில் பங்கேற்ற மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மத்திய அரசின் இரட்டை வேடத்தை கண்டித்து பேசினார் . தமிழக அரசு மத்திய அரசின் இத்தகையப் போக்குக்கு எதிராக செயல்பட வேண்டும் என்றும், முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் காவிரி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவைப் போல சமரசமில்லாமல் செயல்படவேண்டும் என்றார். மே17 இயக்கத் தலைவர் திருமுருகன், மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமன் ஆகியோரின் மீது தமிழக அரசு போட்டிருக்கும் குண்டர் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும், மாட்டுக்கறி மற்றும் மாடு விற்பனை தொடர்பாக தமிழக அரசும், முதல்வர் எடப்பாடியும் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது என்றும் சாடினார் . முன்னதாக பேசிய தோழர் P.R.பாண்டியன் அவர்கள், காவிரி போராட்டத்தில் தொடர்ந்து நம்மோடு இயங்கி வருபவர் தமிமுன் அன்சாரி என்றும், சட்டசபையில் காவிரிக்காக சமரசம் இல்லாமல் தொடர்ந்து பேசி வருகிறார் என்றும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் மஜக
Month:
IIT மாணவன் சூராஜை மஜக தலைவர்கள் நேரில் சந்திப்பு…
சென்னை.ஜுன்.04., சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிஜேபியின் மாணவர் அமைப்பான ஏபிவிபி குண்டர்களால் தாக்குதலுக்குள்ளான IIT மாணவர் சூராஜ் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாநில இளைஞர் அணிச் செயலாளர் J.சமீம் அஹமது ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். கண்ணுக்கு அருகில் எலும்பு முறிவிற்கான அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது. அவர் பூரண குணமடைய இறைவனிடம் பிராத்திப்பதாக அவரிடம் கூறினர். உணவு பழக்கத்தை வைத்து மக்களிடையே பிளவு அரசியலை நடத்தும் பாசிச சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து உறுதியுடன் களமாடுவோம் என்று மஜக சார்பில் சுராஜிடம் கூறப்பட்டது. தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, தலைமையகம் சென்னை #MJK_IT_WING 04.06.2017
மஜக விழுப்புரம் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.
விழுப்புரம்.ஜுன்.04., மாடு, எருது, ஒட்டகங்களை, இறைச்சிக்காகவும், விற்பனைக்காகவும் தடை விதித்த மத்திய பாசிச மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று 04/06/17 ஞாயிற்று கிழமை 10-மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் A.M.இப்ராஹிம் தலைமை தாங்கினார், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் S.முகம்மதுஅலி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்கள். எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com மாநில பொருளாளர் - மஜக குடந்தை அரசன் நிறுவனர் - விடுதலை தமிழ்புலிகள் கட்சி. அ.வ.அப்துல்நாசர் Ex.MLA தலைமை செயற்குழு உறுப்பினர் - தமஜக வழக்கறிஞர். தி.ச.திருமார்பன் மாநில அமைப்பு செயலாளர் - விசிக கடலூர் மன்சூர் தலைமை கழக பேச்சாளர் - மஜக ஆகியோர் மத்திய பாசிச மோடி அரசிற்கு எதிராக அவர்களின் கண்டனங்களை பதிவுசெய்தனர். இந்த கண்டன ஆர்பாட்டதிற்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. விழுப்புரம் மாவட்டம். #MJK_IT_WING 04.06.2017
மாட்டு அரசியல் – திண்டுக்கல்லில் மஜக கண்டன ஆர்ப்பாட்டம்…
திண்டுக்கல்.ஜுன்.04., நரேந்திர மோடியின் மத்திய பாஜக பாசிச அரசின் மாட்டு அரசியலைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் திண்டுக்கல் பேகம்பூரில் நேற்று 03.06.2017 சனிக்கிழமை மாலை 7-மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் ஹபீபுல்லா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மஜக மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி சிறப்புரையாற்றினார். இணைப் பொதுச் செயலாளர் K.M.முகம்மது மைதீன் உலவி கண்டன உரையைப் பதிவு செய்தார். தன் கண்டன உரையில், வளர்ந்துவரும் நாடு என்ற பட்டியலிலிருந்து இந்தியாவை உலக வங்கி தூக்கி எறிந்து விட்டது.. சிறந்த நாடுகள் பட்டியலில் 22வது இடத்தில் இருந்த இந்தியா 25வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டதையும் நினைவு கூர்ந்த அவர், நாட்டை முன்னேற்றம் செய்வதை விட்டு விட்டு மத்திய பாஜக அரசு மாட்டு அரசியல் செய்வதை கண்டித்தார். இந்த நிகழ்வில் முஸ்லிமல்லாத மக்களும், பெண்களும் திரளாகக் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன் மாட்டிறைச்சியுடன் இஃப்தார் நிகழ்ச்சி நடை பெற்றது. தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. திண்டுக்கல் மாவட்டம். #MJK_IT_WING 03.06.2017
வேதை நகர மஜக சார்பில் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் நோன்பு கஞ்சி விநியோகம்…!
நாகை.ஜூன்.03., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி வேதாரண்யம் நகரத்தின் சார்பில் தோப்புத்துறையில் மாற்று மத சகோதரர்களுக்காக நோன்பு கஞ்சி விநியோகம் ஏற்பாடு செய்யப்பட்டது . சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது . சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நோன்பு கஞ்சி, குளிர்பானம் வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சிக்கு வேதை நகரச் செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ் தலைமை தாங்கினார்.மற்றும் ஏனைய நிர்வாகிகள் , உறுப்பினர்களும் கலந்து கொண்டு நோன்பு கஞ்சி விநியோகித்தனர் . தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING வேதாரண்யம் - நகரம் நாகை தெற்கு மாவட்டம் 03_06_17