IIT மாணவன் சூராஜை மஜக தலைவர்கள் நேரில் சந்திப்பு…

image

சென்னை.ஜுன்.04.,  சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிஜேபியின் மாணவர் அமைப்பான ஏபிவிபி குண்டர்களால் தாக்குதலுக்குள்ளான IIT மாணவர் சூராஜ் அவர்களை  மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாநில இளைஞர் அணிச் செயலாளர் J.சமீம் அஹமது ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

கண்ணுக்கு அருகில் எலும்பு முறிவிற்கான அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது. அவர் பூரண குணமடைய  இறைவனிடம் பிராத்திப்பதாக அவரிடம் கூறினர்.

உணவு பழக்கத்தை வைத்து மக்களிடையே பிளவு அரசியலை நடத்தும் பாசிச சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து உறுதியுடன் களமாடுவோம் என்று மஜக சார்பில் சுராஜிடம் கூறப்பட்டது.

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
தலைமையகம் சென்னை
#MJK_IT_WING
04.06.2017