73வது குடியரசு தினவிழா! குடியாத்தம் ஒன்றியத்தில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கிய மஜகவினர்!

ஜன:26., 73 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்றுதல், இனிப்பு வழங்குதல், உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதை தொடர்ந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் T.M.சலிம், அவர்கள் தலைமையில் மூவர்ண கொடியின் அலங்கார ஓட்டிகள் ஓட்டப்பட்டு தேசிய கொடியேற்று விழா சிறப்பாக நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளர் திரு.கணபதி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றினார்

மோடிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெயபிரகாஷ், ஒன்றிய பொருளாளர் நியாமத்துல்லா, பட்டேல் ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

ஒன்றிய செயலாளர் T.M.சலிம், அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள், குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் எஸ்.சையத் முஜாப்பர், N.அலி ஹைதர், J.உவைஸ், A.சுஹேப், G.இப்ரான், S.லோகேஷ், A.சல்மான்
நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
26.01.2022