73வது குடியரசு தினவிழா.. மஜக தலைமையகத்தில் தேசிய கொடியை துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஏற்றி வைத்தார்.

ஜனவரி.26., நாட்டின் 73வது குடியரசு தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்.

அப்போது சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தும், சாதி, மத, வெறி மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில இளைஞரணி செயலாளர் முஹம்மது அசாருதீன், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மி, மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் காஜா மைதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தாஹா , வடசென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் அக்பர் மற்றும் வட சென்னை அன்வர், துறைமுகம் அசன் அலி, துறைமுகம் பகுதி நிர்வாகிகள், திருவல்லிக்கேணி பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
26-01-2022