73வது குடியரசு தின விழா.! கோவை செல்வபுரத்தில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கிய மஜகவினர்!

ஜன:26.,சுதந்திர இந்தியாவின் 75-ஆம் ஆண்டில் நம் நாட்டின் 73வது குடியரசு தின விழாவை இன்று கொண்டாடுகிறோம்.

குடியரசு தினத்தை தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக கோவை மாநகர் மாவட்டம் செல்வபுரத்தில் IKP மாநில செயலாளர் லேனா இசாக், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், ஹனீபா, ஆகியோர் தேசிய கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக வினர் எழுப்பினார்கள்.

இந்நிகழ்வில் வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ஹாருன், மாவட்ட பொருளாளர் நெளபல் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பூ காஜா உசேன், ஹக்கீம், கிளை நிர்வாகிகள் பீர் முகம்மது, முகம்மது யூசுப், சமீர்கான், இஸ்மாயில், சம்சுதீன், செய்யது, மற்றும் நிர்வாகிகள் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர் …

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
26.01.2022