தஞ்சை.ஜுன்.04., தஞ்சாவூரில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தோழர் P.R.பாண்டியன் தலைமையில் 5 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது .
நான்காம் நாளில் போராட்டத்தில் பங்கேற்ற மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மத்திய அரசின் இரட்டை வேடத்தை கண்டித்து பேசினார் .
தமிழக அரசு மத்திய அரசின் இத்தகையப் போக்குக்கு எதிராக செயல்பட வேண்டும் என்றும், முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் காவிரி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவைப் போல சமரசமில்லாமல் செயல்படவேண்டும் என்றார்.
மே17 இயக்கத் தலைவர் திருமுருகன், மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமன் ஆகியோரின் மீது தமிழக அரசு போட்டிருக்கும் குண்டர் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும், மாட்டுக்கறி மற்றும் மாடு விற்பனை தொடர்பாக தமிழக அரசும், முதல்வர் எடப்பாடியும் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது என்றும் சாடினார் .
முன்னதாக பேசிய தோழர் P.R.பாண்டியன் அவர்கள், காவிரி போராட்டத்தில் தொடர்ந்து நம்மோடு இயங்கி வருபவர் தமிமுன் அன்சாரி என்றும், சட்டசபையில் காவிரிக்காக சமரசம் இல்லாமல் தொடர்ந்து பேசி வருகிறார் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜுதீன், மாநில விவசாயி அணி செயலாளர் நாகை.முபாரக், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது கபீர், பொருளாளர் ஜப்பார் , மாவட்ட துணைச் செயலாளர் மெய்தீன், திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .
தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
தஞ்சை தெற்கு மாவட்டம்.
#MJK_IT_WING
04.06.2017