அறிஞர் அண்ணாவின் அன்புக்குரியவரும் , நாவலர் நெடுஞ்செழியனார் அவர்களின் தம்பியுமான இரா. செழியன் அவர்கள் இன்று உயிரிழந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது . மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என வட இந்திய தலைவர்களால் போற்றப்பட்டவர் . நாடாளுமன்ற சட்ட நுட்பங்களை பலரும் இவரிடம் கேட்டுத்தான் தெரிந்துக் கொள்வார்கள் . அவர் நாடாளுமன்றத்திலும் , சட்டமன்றத்திலும் எழுப்பிய விவாதங்களும் , கேள்விகளும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன . தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராகவும் , பல அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனைகளை சொல்லும் அறிஞராகவும் திகழ்ந்தார் . அவரை இழந்துவாடும் ஆதரவாளர்களுக்கும் , குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரங்கலையும் , ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் . இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 06.06.2017
Month:
மாட்டிறைச்சி விவகாரம் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து அறந்தாங்கியில் அணைத்து கட்சி யினர் கண்டன ஆர்ப்பாட்டம்…மஜக பங்கேற்பு…
புதுகை.ஜூன்.06., மாவட்ட செயலாளர் முபாரக் அலி உரை உரை நிகழ்த்தினார் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து மக்களை திரட்டி மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து போராடும்-என பேசினார், ஆர்பாட்டத்தில் மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் மாவட்ட செயலாளர் முபாரக் அலி மாவட்ட மாவட்ட பொருளாளர் அரசை சேக் இஸ்மாயில் மாவட்ட அவைத்தலைவர் அஜ்மீர் அலி மாவட்ட துணைச் செயலாளர் அரசநகரி சையது அபுதாஹிர். மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்பாஸ். மாவட்ட தொழில் நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன் அறந்தாங்கி நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப் ஆகியோர் உள்ளிட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்வீரர்கள் கலந்துக்கொண்டனர் தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி , மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் #MJK_IT_WING 06.05.2017
மதுபானக்கடையை அகற்றுக..! நாகை MLA., கலெக்டரிடம் வலியுறுத்தல்…!
நாகை. ஜுன்.05., நாகப்பட்டினத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை அகற்றுமாறு நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரியிடம் தொகுதி மக்கள் கோரிக்கை அளித்தனர். பல பொதுநல அமைப்புகளும் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில், மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமாரை தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் சந்தித்து நாகை இரயில் நிலையத்திற்கு எதிரே இருக்கும் மதுபான கடையையும், நாகை திருமேனிசெட்டி தெருவில் உள்ள மதுபான கடையையும் உடனடியாக அகற்றிடுமாறு வலியுறுத்தினார். தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் .நாகப்பட்டினம்
திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா நிர்வாகக் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா ஆலோசனைக்கூட்டம் மஜக அலுவலகத்தில் நடைப்பெற்றது. மாவட்ட செயலாளர் முகம்மது பிர்தௌஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முகமது நவபில், துணை செயலாளர் முனாஃப், சாகுல் ஆகியோர் முனனிலை வகித்தனர். இக்கூட்டதிற்கு சிறப்பு அழைப்பாளராக ம.ஜ.க.மாவட்ட செயலாளர் திரு.ஹபீபுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதில் மாணவர் இந்திய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1. இதில் வரும் கல்வி ஆண்டில் மாணவர் இந்தியா சார்பாக மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டது. 2. பொருளாதார செலவுகளை நிர்வாகிகள் மற்றும் நன்ககொடைகள் மூலம் வசூலிப்பது என தீர்மானிக்கப்பட்டது. 3.திண்டுக்கல் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. தகவல் ; ஊடகபிரிவு, மாணவர் இந்தியா திண்டுக்கல் மாவட்டம் 05.06.2017
கண்ணிய தலைவர் அன்றோ…! நமது காயிதே மில்லத்!
இந்தியாவில் ஒரு தலைவருக்கு 'கண்ணியத்திற்குரிய' என்ற அடைமொழி வழங்கப்படுகிறது என்றால் அது காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் (ரஹ்) அவர்களுக்கு மட்டும் தான் என்பது நாடறிந்த உண்மை! கறைபடாத கரம், நேர்மையான சிந்தனைகள், கண்ணியமான அணுகுமுறைகள், எளிமையான பொதுவாழ்வு, தூய்மையான தனி வாழ்வு, சவாலான விவகாரங்களில் துணிச்சலான முடிவுகள், தேசிய ஒருமைப்பாட்டின் மீது அவர் காட்டிய அக்கறை, தமிழ் மீதான தணியாத தாகம், சமூக நல்லிணக்கத்தில் அவர் காட்டிய உறுதி இவையாவும் அந்த பெருமகனை வரலாற்றின் வெளிச்சத்தில் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. நேரு, பெரியார், அண்ணா, அபுல்கலாம் ஆசாத், அறிவாசான் அம்பேத்கார், நம்பூதிபாட், தோழர். ஜீவா, ஐயா முத்துராமலிங்கத் தேவர், கலைஞர், MGR, நாவலர் நெடுஞ்செழியன், பேரா.அன்பழகன் என நாடு தழுவிய அளவில் அவர் கொண்டிருந்த நட்புகள் அவரது அணுகுமுறைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்திய - சீன யுத்தம் நடந்தபோது, எனது மகன் மியாகானை ராணுவத்துக்கு பணியாற்ற அனுப்புகிறேன் என்று நாடாளுமன்றத்தில் முழங்கினார். எது தேசிய மொழி என நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது, என் மொழி தமிழுக்குத்தான் அந்த தகுதி உண்டு என அடித்துப் பேசினார். நாடு பிளவுப்பட்ட நிலையில், ஜின்னா அவர்கள் காயிதே மில்லத் அவர்களைப் பார்த்து