ஆகஸ்ட்-15.,
74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம், தோப்புத்துறை ஆறுமுகச்சந்தியில் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மருதநாயக ஆட்டோ ஓட்டுநர் சங்கம் இணைந்து இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி வேதை நகரம் சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுபகரக் குடிநீர் வழங்கப்பட்டது.
இதில், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச்செயலாளர் சேக் அஹமத்துல்லாஹ் தலைமை வகித்து, வரவேற்புரையாற்றிட தீன்ஸ் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
இறுதியில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் நிர்வாகி சதாம் நன்றி கூறிட கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக்மன்சூர், நகர துணைச் செயலாளர் முருகானந்தம், ஷேக் அமானுல்லாஹ் உட்பட திரளான மஜகவினரும், பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_தெற்கு_மாவட்டம்.
15-08-2020