அவசர சிகிச்சைக்கு இரத்ததானம் செய்த வேலூர் மஜகவினர்! சுதந்திர தினத்தன்றும் இடைவிட சேவையில் மஜகவினர்.!

வேலூர்.ஆகஸ்டு.15.,

நாடு முழுவதும் 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், கேரளா மாநிலம் மலப்புறத்தை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு (6 யூனிட்) கேரளா மாநிலம் கேலிகட் மாவட்ட சேர்ந்த 20 வயது இளைஞருக்கு (7 யூனிட்) Bone marrow transplantation எலும்பு மஜ்ஜை மாற்று அவசர அறுவை சிகிச்சைக்காக வேலூர் CMC மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்ற மஜகவினர் 13-யூனிட் இரத்த தானம் செய்தனர்.

அச்சமயம் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த பெண்மணிக்கு அவசர அறுவை சிகிச்சைக்கும் இரத்தம் தேவைபடுவதாக அவரின் கணவர் சார்பில் கேட்டு கொண்டதற்கு இணங்க மஜகவினர் மேலும் 2-யூனிட் இரத்த தானம் செய்தனர்.

இரத்ததானம் பெற்றவர்களின் உறவினர்கள் மஜகவினருக்கு நன்றி கூறியதுடன், இது ஈடு இணையற்ற சேவை என்றும், சாதி மதம் பாராமல் இக்கட்டான நேரத்தில் மஜக-வினர் ஆற்றும் பணியை பாராட்டுவதாக கூறினர்.

மேலும் தேவையை உணர்ந்து மருத்துவமனைக்கு உடனடியாக இத்தனை நபர்கள் வருகை தந்து இரத்ததானம் செய்ததை மருத்துவமனை ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
15.08.2020