( மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் வாழ்த்துச் செய்தி) முஸ்லிம்களின் இருபெரும் பண்டிகைகளில் ஒன்றான ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் உலகம் எங்கும் இருவேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது . சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி , சூரியன் மறையும் வரை 30 நாட்கள் நோன்பிருந்து , அதிகமாக இறைவழிபாடுகளில் ஈடுபட்டு, தேடி வரும் ஏழைகளுக்கு வாரி வழங்கி ரமலான் மாதத்தின் நிறைவாக நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது . உள்ளங்களில் ஆன்மீக எழுச்சி, செயல்களில் பயிற்சியும் , அணுகுமுறைகளில் பயிற்சியும் ரமலான் தரும் பரிசுகளாகும் . இந்நன்னாளில் சகோதர சமுதாய மக்களோடு அன்பையும் , விருந்தோம்பலையும் பகிர்ந்துக் கொண்டு , நல்லிணக்கம் மேலும் , மேலும் வளர பாடுபட உறுதியேற்போம் . உலகமெங்கும் அன்பும் , அமைதியும் , மானுட ஒற்றுமையும் தழைத்தோங்கவும் , வறுமையும் , துயரமும் மறைந்து மகிழ்ச்சி பெருகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் . அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் எனும் ரமலான் நல்வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் . M. தமிமுன் அன்சாரி
வளைகுடா
வளைகுடா
அல் அய்னில் MKP புதிய கிளை துவக்கம்…
யூ.ஏ.இ.ஜூன்.20., இன்று அல் அய்ன் மண்டலத்திற்குட்பட்ட மரக்கானியாவில் மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை துவங்கப்பட்டது. இந்நிகழ்வில் அமீரக ஆலோசகர் J.சேக்தாவுது, அல் அய்ன் மண்டல செயலாளர் S.முகம்மது இம்ரான், பொருளாளர் பூதமங்களம் ஜாகிர் உசேன், துணை செயலாளர் இலந்தங்குடி M.யூசுப் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்ஷா அல்லாஹ் விரைவில் கிளை நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். மண்டல துணை செயலாளர் அறந்தாங்கி அப்துல்லா அவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை செய்திருந்தார். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய கலாச்சார பேரவை. ஐக்கிய அரபு அமீரகம். #MKP_IT_WING 20.06.2017
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மஹபுலா கிளை நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி…
குவைத்.ஜுன்.17., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை (IKP) மஹபுலா கிளை சார்பாக நடத்திய "மணங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சி" நேற்று16/06/2017 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மஹபுலாவில் மண்டல இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் சகோ. இளையான்குடி சீனி முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மஹபுலா கிளை துணை செயலாளர் சகோ.ஏர்வாடி ஹசன் முகம்மது அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்க. கிளை து.செயலாளர் சகோ.நெல்லை முகம்மது அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகிக்க கிளை பொருளாளர் சகோ.கோட்டைபட்டினம் ஜாபர் அலி அவர்கள் சிற்றுரை நிகழ்த்திய பின் மண்டல செயலாளர் சகோ.முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் நோன்பால் ஏற்படும் மாற்றங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக கிளை செயலாளர் சகோ. கோட்டைபட்டினம் அப்துல் காதர் அவர்கள் நன்றியுரை கூறிய பின் இஃப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிதனர். தகவல்; மனிதநேய கலாச்சார பேரவை (IKP) மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING குவைத் மண்டலம். 55278478, 60338005, 65510446.
அஜ்மானில் செயற்குழுகூட்டம் மற்றும் இப்தார் நிகழ்ச்சி…
யூஎயி.ஜூன்.12., ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மான் மண்டல மனிதநேய கலாச்சார பேரவையின் செயற்குழு கூட்டம் கடந்த 09/06/2017 வெள்ளிகிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு MKP அமீரக செயலாளர் மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மண்டல செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், பித்ரா மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்டவைகள் விவாதிப்பட்டன. கூட்டத்தில் மண்டல பொருளாளராக சகோதரர் கடியாச்சேரி S.அப்துல் மாலிக் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டார்கள். அஜ்மான் மண்டல பொருப்பாளராக அமீரக தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் Y.M.ஜியாவுல் ஹக் அவர்கள் நியமிக்கப்பட்டார். மண்டல செயலாளர் செல்லப்பா அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. பின்னர் மண்டலத்தின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அமீரக துணை செயலாளர் M.அபுல் ஹசன், மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய கலாச்சார பேரவை. ஐக்கிய அரபு அமீரகம். #MJK_IT_WING
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை ஆலோசணைக் கூட்டம்.
குவைத்.ஜூன்.12., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை ஆலோசணைக் கூட்டம் கடந்த 09/06/2017 வெள்ளிக்கிழமை இஃப்தாருக்கு பின் சல்வாவில் மண்டல செயலாளர் சகோ.முத்துகாபப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் தலைமமையில் நடைபெற்றது. இதில் இவ்வருட ரமலான் மாதத்தின் அடுத்த கட்ட நிகழ்ச்சி நடத்துவது குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மண்டல, கிளை நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டனர். தகவல்; மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி. குவைத் மண்டலம். #MJK_IT_WING 55278478 - 60338005 - 65510446.