You are here

அஜ்மானில் செயற்குழுகூட்டம் மற்றும் இப்தார் நிகழ்ச்சி…

image

image

யூஎயி.ஜூன்.12., ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மான் மண்டல மனிதநேய கலாச்சார பேரவையின் செயற்குழு கூட்டம்  கடந்த 09/06/2017 வெள்ளிகிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு MKP அமீரக செயலாளர் மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மண்டல செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், பித்ரா மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்டவைகள் விவாதிப்பட்டன.

கூட்டத்தில் மண்டல பொருளாளராக சகோதரர் கடியாச்சேரி S.அப்துல் மாலிக் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டார்கள்.

அஜ்மான் மண்டல பொருப்பாளராக அமீரக தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் Y.M.ஜியாவுல் ஹக் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

மண்டல செயலாளர் செல்லப்பா அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

பின்னர் மண்டலத்தின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அமீரக துணை செயலாளர் M.அபுல் ஹசன், மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய கலாச்சார பேரவை.
ஐக்கிய அரபு அமீரகம்.
#MJK_IT_WING

Top