சிங்கப்பூர்.மார்ச்.07., தாயகத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க சிங்கப்பூர் வருகை தந்துள்ள மஜக பொதுச்செயாளர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., அவர்களுடன் உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) இன்று சந்தித்து கலந்துரையாடினர். தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING சிங்கப்பூர் மண்டலம்
தமிழகம்
தமிழகம்
துறைமுகம் பகுதி தொழில்நுட்ப அணி செயலாளர் திருமணத்தில் மஜக நிர்வாகிகள்!
சென்னை. மார்ச்.05., மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT WING) செயலாளர் சகோ யாசர் அரபாத் அவர்களின் திருமண நிகழ்வு இன்று 05-03-2017 நடைபெற்றது. மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, மாநில செயலாளர்கள் என்.தைமிய்யா, நாச்சிகுளம் தாஜூதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ராயபுரம் அபுதாஹிர், மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித், துணை செயலாளர்க ள் ஹூசைன் மற்றும் அப்பாஸ், துறைமுகம் பகுதி துணை செயலாளர்கள் அலீப் மற்றும் அபு ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING மத்திய சென்னை 05.03.2017
மஜகவில் இணைத்துக்கொண்ட புதிய உறுப்பினர்…
வேலூர்.மார்ச்.05., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சகோ.கதிர் அஹமத் என்பவர் மாவட்ட துணை செயலாளர் SMD.நவாஸ், இளைஞர் அணி து.செயலாளர் S.Y.ஆரிப், குடியாத்தம் நகர செயலாளர் S.அணீஸ், நகர பொருளாளர் V.முபாரக் அஹமத் முன்னிலையில் மஜகவில் இணைந்தார். நகர நிர்வாகிகளும் உடன் இருந்தனர். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, (MJK IT-WING) வேலூர் (மே) மாவட்டம் 05.03.2017
இளையான்குடியில் மஜக மரம் நடும் விழா! பொருளாளர் மற்றும் MP., MLA.,க்கள் பங்கேற்பு!!
சிவகங்கை.மார்ச்.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மஜகவின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முகம்மது சைபுல்லாஹ் அவர்கள் தலைமையில் தெய்வபுஷ்ப ஊரனிகரையில் 04-03-2017 மரம் நடும் விழா சிறப்பாக நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் சகோதரர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.com., அவர்களும், தோழமை கட்சியான அஇஅதிமுகவின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினரும், சிவகங்கை மாவட்ட செயலாளருமான சகோதரர் #செந்தில்_நாதன் அவர்களும், அஇஅதிமுகவின் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் #மாரியப்பன்_கென்னடி அவர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள். முன்னதாக பேசிய மாநில பொருளாளர் ஹாருன் ரசீது அவர்கள் தன்னுடைய 43 வயதில் சுத்தம் செய்து பார்த்திடாத ஊரனியை முயற்சி எடுத்து சுத்தம் செய்த தப்பாத்தை சாகுல் அவர்களுக்கும் உதவியாக இருந்து செயல்பட்ட கான்சா உஸ்மான் அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் இளையான்குடிக்கென்று ஓர் பண்புள்ளதாகவும் அனைத்து விஷயங்களுக்கும் அரசை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே மக்களிடம் பொருளாதார உதவியை பெற்றுசெயல்படுவோம். தற்போதும் அதே போல் மக்களிடம் பொருளாதார உதவி பெற்று ஊரனியை சுத்தம் செய்துவிட்டோம். ஊரனியை தூர்வாருவது பேவர்பிளாக் நடைபாதை அமைப்பது
மெரினா போராட்ட மாணவர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம்
சென்னை.மார்ச்.05., தமிழகத்தில் பெரும் மாணவர் புரட்சியை உருவாக்கிய ஜல்லிக்கட்டு வெற்றி போராட்டத்திற்க்கு பின் போராட்டத்தை வழிநடத்திய மாணவர் அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டத்தின் முதல் அமர்வு நேற்று (04.03.2017) சென்னையில் நடைப்பெற்றது. மாணவர் இந்தியா சார்பாக மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் மற்றும் மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர் பங்கேற்றனர். இதில் அனைத்து மாணவர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து "தமிழக மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு" (Confederation Of Tamilnadu Students Organization-COTSO) உருவாக்கப்பட்டது.கூட்டமைப்பின் அடுத்த அமர்வில் கொள்கைகள்,செயல்பாடுகள் குறித்து இறுதி முடிவு வகுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஊடகபிரிவு : மாணவர் இந்தியா தலைமை