வருகின்ற மே 13,14 ஆகிய இரு தினங்கள் சென்னை, மாமல்லபுரத்தில் மாணவர் இந்தியா சார்பில் சிறப்பு திறன் மேம்பாடு முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதிலிருந்து பதிவு செய்யப்பட்ட 250 மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 75 மாணவர்களுக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த அறிஞர்கள் வகுப்பெடுக்க உள்ளனர். முகாம் நடத்துவதற்கான பண்ணை வீட்டை இன்று (08.05.2017) காலை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான், காஞ்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சர்தார் மற்றும் மருத்துவ சேவை அணி செயலாளர் ரஃபிக் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் : ஊடக பிரிவு #மாணவர்_இந்தியா 08.05.2017
தமிழகம்
தமிழகம்
நாகை சட்டமன்ற அலுவலகத்தில் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு!
நாகை.மே.07., சுட்டெரிக்கும் வெயிலின் தாகம் தீர்க்க பொதுமக்களின் சேவைக்காக நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., அவர்களின் ஆலோசனைக்கிணங்க சட்டமன்ற அலுவலகத்தில் நாகை நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் 07-05-2017 இன்று மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாநில துணைச்செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லா அவர்கள் கலந்துகொண்டு பந்தலை திறந்துவைத்தார். மாநில விவசாய அணியின் செயலாளர் நாகை முபாரக், மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாவட்ட துணை செயலாளர் தோப்புத்துறை சேக் மன்சூர், நாகை நகர செயலாளர் கண்ணுவாப்பா என்கிற சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஜீஸ் ரஹ்மான் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நாகை நகர மஜக சார்பில் ஒரு மாதத்திற்கு மேலாக பொதுமக்களுக்கு தினமும் மோர், குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வழங்கப்படும். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING நாகப்பட்டினம் மாவட்டம் 07-05-2017
வட்டாச்சியரை கண்டித்து திண்டுக்கல்லில் மஜக கண்டன ஆர்ப்பாட்டம்..! இணை பொது செயலாளர் பங்கேற்பு…
திண்டுக்கல்.மே.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டும், சர்வாதிகாரத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கின்ற திண்டுக்கல் கிழக்கு வாட்டாச்சியர் திருமதி கற்பகத்தின் அடாவடிதனத்தை எதிர்த்து கேள்வி கேட்ட. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் யூ.மரைக்காயர் சேட் அவர்கள் மீது போலீசில் பொய் புகார் அளித்து கைது செய்த திண்டுக்கல் கிழக்கு வட்டாசியரை கண்டித்து மாவட்ட செயலாளர் ஏ.ஹபிபுல்லாஹ் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மஜக இணை பொதுச் செயலாளர் கே.எம்.மைதீன் உலவி அவர்களும், மாநில துணைசெயலாளர் எம்.திண்டுக்கல் அன்சாரி அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி அன்பரசு அவர்களும் கண்டன உரை நிகழ்தினார்கள். மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள், நகர, பகுதி, ஒன்றியம், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்களும், பெண்களும் திரளாக கலந்துக் கொண்டனர்கள். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING திண்டுக்கல் கிழக்கு. 06.05.2017
மஜக தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம்…
தூத்துக்குடி.மே.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று 05-05-2017 மாலை 4மணியளவில் காயல்பட்டினம் ஹனியா மினி ஹால் துபைல் காம்ப்ளக்ஸில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப் முன்னிலை வகித்தார், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ராஸிக் முஸம்மில் வரவேற்புரையாற்றினார்கள். இதில் மாநில செயலாளர் N.A.தைமிய்யா M.Sc மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது மீரா தம்பி ஆகிய இருவரும் சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக நகர செயலாளர் S.M.ஜிப்ரி நன்றி உரையாற்றினார் மாவட்டத்தின் பல்வேறு கிளையில் இருந்து நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய மாநில செயலாளர் அவர்கள் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வு பற்றி எடுத்துரைத்தார் மேலும் நிர்வாகிகளின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. 1.தனியார் பள்ளியில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தையே வசூலிக்க வேண்டும், கல்வி கட்டண கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 2.கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கு தடையாக இருக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், 3.தொடர்ந்து தமிழ் மொழிக்கு விரோதமாக இந்தி தினிப்பில் ஈடுபட்டு
எழும்பூர் பகுதியில் மஜகவின் கொடியேற்றம் :மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது ஏற்றிவைத்தார்கள்…
சென்னை.மே.05., நேற்று 04.05.2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதி புளியந்தோப்பு 77வது கிளையில் இரண்டு இடங்களில் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருலாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் கொடி ஏற்றி வைத்தார்கள். உடன் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட துணை செயலாளர் ரவுப் ரஹீம், மாநில செயற்குழு உறுப்பினர் அபு தாஹிர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அமிர் அப்பாஸ் ஆகிய மாநில,மாவட்ட நிர்வாகிகளும், பகுதி செயலாளர் T.M.யூசுப், து.செயலாளர் அப்துல் கலாம், A.Y.முஹம்மது ஜயுப், I.முஹம்மதுஅலி, S.குதுரத்துல்லா, K.பெரோஸ், A.முஹம்மது சாதிக், I.இம்ரான், சுல்த்தான் மொய்தீன் மற்றும் பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, மத்திய சென்னை மாவட்டம். #MJK_IT_WING 04.05.2017