#காவிரியை_மீட்போம்! #மண்ணை_காப்போம்! நிலம் கொடா இயக்க பிரச்சாரக் குழு வாகனம் முத்துப்பேட்டை வருகை! மஜக மாநில செயலாளர் வரவேற்று உரை... முத்துப்பேட்டை.ஆக.09., நேற்று முன்தினம் (07/08/2017) திங்கள் அன்று திருவாரூரில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டுயக்க தலைவர் தோழர் P.R.பாண்டியன் அவர்களின் அழைப்பை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்த நிலம் கொடா இயக்க பிரச்சார பயண வாகனம் பல்வேறு ஊர்களில் தனது பரப்புரையை செய்துகொண்டு இன்று முத்துப்பேட்டைக்கு நகருக்கு வருகை தந்தது. அப்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் வர்த்தக கழகத்தின் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பரப்புரை பிரச்சாரத்தின் போது மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் பிரச்சார பயணத்தின் நோக்கத்தையும், விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் தனது பிரச்சார உரையில் விளக்கி பேசினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING திருவாரூர் மாவட்டம். 09.08.2017
தமிழகம்
தமிழகம்
மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!
கோவை.ஆக.09., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அனீபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆகஸ்ட் 13.08.17அன்று பொள்ளாச்சி நகரத்தின் சார்பில் நடைபெறும் கொடியேற்று விழாவில் அதிகமான மக்கள் கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது, ஆகஸ்ட்15. 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 71 யூனிட் இரத்ததானம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது, ஆகஸ்ட்15 அன்று கோவை மாவட்ட மருத்துவ அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் நடைபெறும் மாபெரும் மருத்துவமுகாமை சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தகவல்.; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கோவை_மாநகர்_மாவட்டம் 08.08.17
மஜகவின் கோரிக்கை ஏற்று குடியாத்தம் நகரம் 7ஆவது வார்டில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டது..!
குடியாத்தம்.ஆக.09., குடியாத்தம் நகரம் 7 வது வார்டில் தண்டுமாரியம்மன் கோவில் 2- வது தெருவில் நீண்ட நாட்களாக குடியிருப்புகள் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் கால்வாயில் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடந்தது. இதனால் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும், இதை உடனடியாக தூர்வார்ப்பட வேண்டும் என்றும் நகராட்சி ஆணையரிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இக்கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக அப்பகுதியில் உள்ள பெரிய கால்வாய் நேற்று #ஜெசிபி இயந்திரம் மூலம் தூர்வரப்பட்டது. #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையருக்கும் மற்றும் நகராட்சி உதவி அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING குடியாத்தம் நகரம். 08.08.17
பல்வேறு கட்சியில் இருந்து விலகி மஜகவில் இணைந்த இளைஞர்கள்…!
இராமநாதபுரம்.ஆக.08., நேற்று முன்தினம் இராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்தார்கள். அப்பொழுது வருகை தந்த மதுரையை சேர்ந்த பல்வேறு கட்சியில் இருந்து விலகி 30 இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். பரமக்குடியில் பயணியர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மஜக மாநில பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் புதிதாக வந்த அனைவருக்கும் கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் பற்றி தெளிவாக விளக்கினார்கள். இந்நிகழ்வில் மஜக இணை பொதுச் செயலாளர் K.M.மைதீன் உலவி, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், இராமநாதபுரம் மாவட்ட துணை செயலாளர் அஜ்மல் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING மதுரை வடக்கு மாவட்டம். 06.08.2017
ஈரோட்டில் தொடங்கியது மஜக-வின் நன்கொடை சேகரிப்பு !
ஈரோடு.ஆக.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நன்கொடை சேகரிப்பு மாதங்களாக அறிவிக்கப்பட்டு, மாவட்டம் தோறும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இம்மாதம் முழுவதும் பிரமுகர்கள், வணிகர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. நாகை (தெற்கு) மாவட்டத்தை தொடர்ந்து, ஈரோடு (கிழக்கு) மாவட்டத்திற்கு இன்று (08.08.17) மஜக பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி ஆகியோர் வருகை தந்தனர். வழக்கறிஞர் தேவராஜ், பாதிரியார் பிரகாஷ், தொழிலதிபர்கள், மருத்துவர்கள் மற்றும் ஜமாத்தார்கள் என சமூகத்தில் பல்வேறு தரப்புகளை சேர்ந்தவர்களையும் சந்தித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி நன்கொடைகளை சேகரித்தனர். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பாபு, ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷஃபி, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷாநாவாஸ் உள்ளிட்டோருடன் ஈரோடு மாநகர ம.ஜ.க வினரும் பங்கேற்றனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING ஈரோடு கிழக்கு மாவட்டம் 08.08.17