நிலம் கொடா இயக்க பிரச்சாரக் குழு வாகனம் முத்துப்பேட்டை வருகை! மஜக மாநில செயலாளர் வரவேற்று உரை…

image

image

#காவிரியை_மீட்போம்!
#மண்ணை_காப்போம்!

நிலம் கொடா இயக்க பிரச்சாரக் குழு வாகனம் முத்துப்பேட்டை வருகை! மஜக மாநில செயலாளர் வரவேற்று உரை…

முத்துப்பேட்டை.ஆக.09., நேற்று முன்தினம் (07/08/2017) திங்கள் அன்று திருவாரூரில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டுயக்க தலைவர் தோழர் P.R.பாண்டியன் அவர்களின் அழைப்பை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்த நிலம் கொடா இயக்க பிரச்சார பயண வாகனம் பல்வேறு ஊர்களில் தனது பரப்புரையை செய்துகொண்டு இன்று முத்துப்பேட்டைக்கு நகருக்கு  வருகை தந்தது.

அப்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் வர்த்தக கழகத்தின் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பரப்புரை பிரச்சாரத்தின் போது மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் பிரச்சார பயணத்தின் நோக்கத்தையும், விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் தனது பிரச்சார உரையில் விளக்கி பேசினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
திருவாரூர் மாவட்டம்.
09.08.2017