மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!

image

image

கோவை.ஆக.09., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அனீபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆகஸ்ட் 13.08.17அன்று பொள்ளாச்சி நகரத்தின் சார்பில் நடைபெறும் கொடியேற்று விழாவில் அதிகமான மக்கள் கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது,

ஆகஸ்ட்15. 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 71 யூனிட் இரத்ததானம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது,

ஆகஸ்ட்15 அன்று கோவை மாவட்ட மருத்துவ அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் நடைபெறும் மாபெரும் மருத்துவமுகாமை சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தகவல்.;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
கோவை_மாநகர்_மாவட்டம்
08.08.17