ஜனவரி_08 கோவை பிரகடனம்! உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பு!

ஜனவரி.12., நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி, பொதுமன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்யக் கோரி, கடந்த ஜனவரி -08 அன்று கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுத்த கோவை சிறை முற்றுகை போராட்டம் பெரும் தாக்கத்தை தமிழக அளவில் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு நெருக்கடிகள், பொதுவான உயிர் அச்சம் ஒரு புறமும், பொது நலன் கருதி வெளி மாவட்ட பெண்கள், முதியவர்களை போராட்டத்திற்கு வர வேண்டாம் என போராட்ட குழு அறிவுறுத்தியது உள்ளிட்ட பலவற்றை தாண்டி ஆயிரக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதிலிமிருந்தும் வந்து குவிந்தது சகல தரப்பையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ‘100 நாட்கள் காத்திருப்போம் ‘ என்ற கோவை பிரகடனம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

இதை அரசு தரப்பு கூர்ந்து கவனித்து வருவதாகவும் தகவல்கள் வருகிறது.

இந்நிலையில் கோவை பிரகடனம் இன்று முறைப்படி உயர் அதிகாரிகளுக்கு மஜக தலைமையகத்திலிருந்து பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கான ஆணையத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நீதியரசர் ஆதிநாதன், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சிறைத்துறை இயக்குனர் ஆகியோருக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக நடந்து முடிந்த நமது போராட்டத்தின் நோக்கம் குறித்தும், மனிதாபிமான அடிப்படையில் இதில் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#ReleaseLongTermPrisoners
#மஜக_கோவை_பிரகடனம்
#சிறைவாசிகள்_விடுதலை

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
12.02.2022