உலகமெங்கும் நிறைந்து வாழும் தமிழர்களின் ஒப்பற்ற திருநாளாக #பொங்கல் திருநாள் திகழ்கிறது.
விவசாயத்தை முன்னிறுத்தி; மண்ணின் பண்பாட்டை போற்றி; சார்பற்ற ஒரு இயற்கை கொண்டாட்டமாக இத்திருநாள் முன்னெடுக்கப்படுவது இதன் சிறப்புகளில் ஒன்றாகும்.
இத்திருநாளின்போது பனி கொட்டும் மார்கழி மாதமானது, தன் இதமான குளிரை தை மாதத்திற்கு தாரை வார்க்கும் இயற்கை நிகழ்வு அழகுற பரிமாறப்படுகிறது.
செடிகளும், கொடிகளும், பயிர்களும், மரங்களும் ஈரம் சொட்ட சொட்ட காட்சி தரும் ரம்மியமும் தைத்திருநாளை மெருகூட்டுகிறது.
விவசாயிகளும், விவசாயத்தை கொண்டாடும் மக்களும் கூடி மகிழும் காட்சிகளை இத்திரு நாளில்தான் காண முடியும்.
இத்திருநாளில் இயற்கை முறை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு,, நீராதார சேமிப்பு, உயிரினங்களின் உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்க உறுதியேற்போம்.
பொங்கல் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
மு தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி,
13.01.2022