
ஜூன் 24.,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூரில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பாஜக பிரமுகர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்சா, கண்டன கோஷங்களை எழுப்பினார்.
ஒசூரை சேர்ந்த திரளான மக்கள் கலந்துக் கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிபடுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முகமது ஆரிவ், மாநில செயற்குழு உறுப்பினர் அமீன் சிக்கந்தர், மாவட்ட பொருளாளர் செயத் நவாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் சர்தார், அய்யூப் கான், மாநகர செயலாளர் யாகூப் ஜவ்ரு, ஓசூர் மாநகர செயலாளர் முகமது உமர், செயத் ஆரீப், யாசுப் ஜவ்ரு, முகமது அப்சல், முகமது யஹயா உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கிருஷ்ணகிரி_மேற்கு_மாவட்டம்.
24.06.2022