குடியாத்தத்தில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து அனைத்து கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்! மஜக வினர் திரளானோர் பங்கேற்பு!!


வேலூர்.ஜன.28,

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் 60நாட்களுக்கும் மேலாக போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்,.

அதன் தொடர்ச்சியாக குடியரசு தினமான ஜனவரி 26 அன்று விவசாயிகளின் பேரணி நடைபெற்றது, அப்பேரணியில் ஏற்பட்ட அசம்பாவித நிகழ்வுகளில் மத்திய மோடி அரசின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகள் இணைந்து குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் IS.முனவ்வர் ஷரிப், குடியாத்தம் நகர செயலாளர் S.அனிஸ் மற்றும் கட்சியின் நகர, கிளை நிர்வாகிகளும் திரளாக கலந்துக் கொண்டனர்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#வேலூர் மாவட்டம்.
28/01/2021