
ஜூன்:24.,
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட பாஜக நிர்வாகிகள் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால், ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி மஜக ஒருங்கிணைப்பில் கூடலூரில் அனைத்து கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மஜக நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, தலைமை தாங்கினார்.
இதில் மஜக மாநில துணை செயலாளர் ஜாவித் ஜாபர், அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஜமாத் நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.
நிகழ்வின் இறுதியில் மஜக மாவட்ட பொருளாளர் ரபீக், நன்றியுரை நிகழ்த்தினார்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நீலகிரி_மேற்கு_மாவட்டம்
24.06.2022