பல்வேறு கட்சியில் இருந்து விலகி மஜகவில் இணைந்த இளைஞர்கள்…!

image

image

இராமநாதபுரம்.ஆக.08., நேற்று முன்தினம் இராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்தார்கள்.

அப்பொழுது வருகை தந்த மதுரையை சேர்ந்த பல்வேறு கட்சியில் இருந்து விலகி 30 இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.

பரமக்குடியில்  பயணியர் மாளிகையில்  நடைபெற்ற இந்த நிகழ்வில் மஜக மாநில பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் புதிதாக வந்த அனைவருக்கும் கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் பற்றி தெளிவாக விளக்கினார்கள்.

இந்நிகழ்வில் மஜக இணை பொதுச் செயலாளர் K.M.மைதீன் உலவி, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், இராமநாதபுரம் மாவட்ட துணை செயலாளர் அஜ்மல் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
மதுரை வடக்கு மாவட்டம்.
06.08.2017